தமிழக நீராதாரங்கள் பறிபோகிறது; முதல்வர் ஸ்டாலின் வாய் திறக்க மறுக்கிறார்... பி.ஆர்.பாண்டியன் ஆவேசம்!

பி.ஆர்.பாண்டியன் - ஸ்டாலின்
பி.ஆர்.பாண்டியன் - ஸ்டாலின்
Updated on
2 min read

"தமிழகத்தின் ஒவ்வொரு நீராதாரங்களும் பறிபோகின்றன. இதற்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் வாய் திறக்க மறுக்கிறார்" என்று தமிழக நதிநீர் உரிமைகள் குறித்து தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் தமிழக நதிநீர் உரிமைகள் குறித்து தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு விவசாய சங்கங்களின் தலைவர்கள் விவசாயிகள் பங்கேற்றனர். இந்நிகழ்வில் தமிழகத்திற்கு வரும் நதிகளுக்கு இடையே பிற மாநிலங்களில் கட்டப்பட்டு வரும் அணைகளை தடுப்பது குறித்தும், அதற்கான போராட்டங்களை முன்னெடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

பி.ஆர். பாண்டியன்
பி.ஆர். பாண்டியன்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இக்குழுவின் தலைவர் பி.ஆர்.பாண்டியன், "தமிழ்நாட்டில் காவிரி, பாலாறு, சிறுவாணி, அமராவதி, முல்லைப் பெரியாறு உள்ளிட்ட நீர் ஆதாரங்கள் ஒவ்வொன்றாக பறிபோய் கொண்டிருக்கிறது. இதனை தட்டி கேட்பதற்கு தமிழ்நாடு அரசு தயங்கி வருகிறது. சிறுவாணி ஆற்றிற்கு நடுவே இரண்டு ஆண்டுகளுக்குள் கேரள மாநிலம் அணை கட்டியுள்ளது.

2015 ஆம் ஆண்டு கேரள மாநிலம் அணை கட்டுவதற்கு கர்நாடக மாநிலம் அனுமதி அளித்ததாகவும் அன்றைய நாட்களில் விவசாயிகள் போராட்டம் நடத்தி அந்த அனுமதியை மத்திய அரசு திரும்ப பெற்றது. இத்தகைய நிலையில் திமுக அரசு பொறுப்பேற்ற இரண்டு ஆண்டுகளில் கேரள மாநிலம் அங்கு அணைகளை கட்டி சிறுவாணிக்கு தண்ணீர் வருவதை தடுத்து நிறுத்தி உள்ளது.

சிலந்தி ஆற்றில் சட்டவிரோதமாக கேரள அரசு அணை கட்ட முயற்சித்து வருகிறது. எந்த அரசாங்கமும் அதன் விருப்பத்திற்கு அணைகளை கட்ட முடியாது. பாசன விவசாயிகள் கருத்துக்களை கேட்காமல் எந்தத் திட்டத்தையும் நிறைவேற்ற முடியாது. காவிரி மேலாண்மை திட்டத்தில் அறிவுரைகளை கேட்காமல் எந்த திட்டத்தையும் நிறைவேற்ற முடியாது. நாம் பெறுகிற இடத்தில் இருக்கின்ற பொழுது காவிரி மேலாண்மை ஆணையத்தை செயல்படுத்த வேண்டிய அதிகாரம் தமிழக அரசிடம் உள்ளது.

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு சட்டவிரோதமாக பிப்ரவரி மாதம் காவிரி மேலாண்மை ஆணையத்தில் தமிழக அரசின் ஒப்புதலோடு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் கூறுகிறார். இதற்கு இதுவரை தமிழக முதலமைச்சர் வாய் திறக்கவில்லை.

முல்லை - பெரியாறு அணை
முல்லை - பெரியாறு அணை

முல்லைப் பெரியாறுவில் அணை கட்டுவதற்கு மத்திய அரசிற்கு கேரள அரசு விண்ணப்பம் அளித்துள்ளது. மே மாதம் அதற்காக ஒரு தனி குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது. இதனை நிறைவேற்றுவதற்கு சாரங்கபாணி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாக வெளிவரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கிறது. ஒவ்வொரு நீராதாரங்களும் பறிபோகிறது. இதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாய் திறக்க மறுக்கிறார். ஒட்டுமொத்தமாக விளைநிலங்களை அழித்துவிட்டு கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்ப்பதற்கு திமுக அரசு கார்ப்பரேட்டுகளுடன் கைகோர்த்து நடை போடுகிறதோ என்று தோன்றுகிறது.

தமிழகத்தின் நீர் வளத்தை காக்க "கொங்கு மண்டல நீர் ஆதார உரிமை மீட்பு குழு" வை இன்று உருவாக்கியுள்ளோம். இதன் மூலம் வரும் ஜூன் 13ஆம் தேதி, அணைகளை கட்ட முயற்சித்து வரும் கேரளா அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். அதற்கு முன்னதாக, 28ஆம் தேதி முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவதை கண்டித்து மதுரை வருமானவரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட உள்ளோம்" என்று அவர் கூறினார்.

இதையும் வாசிக்கலாமே...

கேன்ஸ் விழாவில் சிறந்த நடிகைக்கான விருது.. வரலாறு படைத்தார் இந்திய நடிகை!

நிறைமாத நிலவே வா... வா... நடிகை அமலபால் லேட்டஸ்ட் போட்டோஷூட்

ரூ. 640 கோடியில் மருமகளுக்குப் பரிசு... அசத்திய அம்பானி மனைவி!

சொகுசு ஓட்டலில் பிரதமர் மோடி தங்கியதில் ரூ.80 லட்சம் பில் பாக்கி... 18 சதவீத வட்டியுடன் செலுத்த எச்சரிக்கை!

ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகனுடன் மது விருந்து நடத்திய குற்றவாளி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in