தொடங்கியது... இன்று முதல் தமிழகம் முழுவதும் தினந்தோறும் 1000 இடங்களில் மருத்துவ முகாம்!

தொடங்கியது... இன்று முதல் தமிழகம் முழுவதும் தினந்தோறும் 1000 இடங்களில் மருத்துவ முகாம்!

டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் இன்று 1000 இடங்களில் சிறப்பு மருத்துவம் நடைபெறுகிறது. காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை இந்த மருத்துவ முகாம்கள் நடைபெறவுள்ளன.

டெங்கு கொசு
டெங்கு கொசு

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதேபோல் வெயிலும், மழையும் மாறி மாறி வருவதால் பலரும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அனைத்து மாவட்ட துணை சுகாதார இயக்குநர்கள் மற்றும் நகர் நல அலுவலர்களுக்கு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மறு உத்தரவு வரும் வரை இன்று முதல் தமிழகம் முழுவதும் ஆயிரம் இடங்களில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம்கள் நடத்த மாவட்ட நிர்வாகங்களுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் உத்தரவிட்டுருந்தார்.

மூவர் அல்லது அதற்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், அந்த இடத்திற்கு முன்னுரிமை அளித்து முகாம் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மருத்து முகாம் நடத்த வேண்டும்.

வீடு வீடாக சென்று டெங்கு, ப்ளூ காய்ச்சல் தொடர்பாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும், கொசுப்புழு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப் படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதே போல் பள்ளிகளுக்கு சென்று மாணவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளவும், அறிகுறிகள் இருந்தால் அதற்கான உரிய சிகிச்சைகள் வழங்கவும் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை தமிழ்நாடு முழுவதும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ‘’மழைக்காலங்களில் கொசு புழுக்கள் உற்பத்தியாகி, டெங்கு,மலேரியா நோய்கள் பரவாமல் இருக்க கொசுப் புழு உற்பத்தியாகும் இடங்களை அடியோடுஅகற்றும் வகையில், பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழ்நாடு முழுவதும் டெங்குவால் பாதிக்கப்பட்டு 363 பேர் சிகிச்சை பெறுகின்றனர். சென்னையில் மட்டும் 54 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அக்.1-ம் தேதி (இன்று) தமிழகத்தில் ஒரே நாளில் 1,000 காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளன. சென்னையில் நடைபெறும் முகாமை நானும், துறைச் செயலரும் தொடங்கி வைக்கிறோம். தொடர்ந்து இதுபோன்ற முகாம்கள் நடத்தப்படும்'' என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

இன்று முதல் அமலுக்கு வரும் புதிய திட்டங்கள், கட்டுப்பாடுகள் இவை தான்!

'நடிகர் திலகம்’ சிவாஜி கணேசன் பிறந்தநாள் ஸ்பெஷல்: ‘பராசக்தி’ முதல் ‘படையப்பா’ வரை!

எல்ஐசி ஹைட்டு... எடப்பாடியார் வெயிட்டு!

‘ஆடியோ லாஞ்ச் கேன்சல்’ அதிமுகவைத் தேடிப்போன அண்ணாமலை!

நாளை தமிழகம் முழுவதும் 12,525 ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in