பிறக்கும் அக்டோபர் மாதம்... அமலுக்கு வரும் புதிய திட்டங்கள், கட்டுப்பாடுகள் இவைதான்!

முதலீடு மற்றும் சேமிப்பில் புதிய நடைமுறைகள்
முதலீடு மற்றும் சேமிப்பில் புதிய நடைமுறைகள்

அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் புதிய திட்டங்கள் மற்றும் கட்டண விதிப்புகள் குறித்து இங்கே அறிந்து கொள்ளலாம்.

2023ம் ஆண்டின் கடைசி காலாண்டுக்குள் நுழைகிறோம். அக்.1 முதல் அரசு சார்பில் விதிக்கப்படும் இந்த புதிய திட்டங்கள், அறிவிப்புகள் குறித்து அறிந்துகொள்வது, பல தடுமாற்றங்களை தவிர்க்க உதவும்.

பத்திரப்பதிவில் மாற்றம்: அக்டோபர் மாதம் முதல் பத்திரப்பதிவில் முக்கிய மாற்றம் வருகிறது. மோசடி பதிவுகளைத் தவிர்க்க, சொத்துக்களின் புகைப்படமும் இனி சேர்க்கப்பட வேண்டும்.

அக்டோபர் 1 முதல் மாற்றங்கள்
அக்டோபர் 1 முதல் மாற்றங்கள்

கிரெடிட் கார்டு வெளிநாடு உபயோகத்துக்கு ஜிஎஸ்டி வரி: இந்தியாவுக்கு வெளியே கிரெடிட் கார்டு வாயிலான செலவினம் ரூ7 லட்சத்துக்கு மேலே இருப்பின், இனி 20 சதவீதம் வரி செலுத்த வேண்டியிருக்கும்.

வெளிநாட்டு கல்விக்கடன்: வெளிநாட்டில் உயர்கல்வி பெற விரும்புவோர் பெறும் கடன்தொகை ரூ7 லட்சத்தைவிட அதிகமாக இருப்பின் 0.5 சதவீதம் வரி செலுத்த வேண்டியிருக்கும்

ரூ.2 ஆயிரம் நோட்டுகள்: ரூ2 ஆயிரம் நோட்டுகளை வங்கியில் செலுத்த அல்லது மாற்றிக்கொள்ளவதற்கான அவகாசம் அக்டோபர் 7 உடன் முடிகிறது.

பங்குச்சந்தை முதலீடுகளில் வாரிசுதாரர் நியமனம்: பங்குச்சந்தை சார்ந்த டிமேட் கணக்கு மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு தொடர்பான கேஒய்சி நடைமுறைகள் அக்டோபர் முதல் மேலும் இறுகுகின்றன. வாரிசுதாரர் சேர்க்கப்படாத மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் டிமேட் கணக்குகள் தற்காலிகமாக முடக்கப்படும். அவற்றுடனான பரிவர்த்தனைகள் தடைபடுவதால் புதிதாக பங்குகளை வாங்கவோ, இருப்பில் உள்ளதை விற்கவோ முடியாது போகும்.

சேமிப்பு, முதலீடு
சேமிப்பு, முதலீடு

சிறுசேமிப்பு திட்டங்களில் ஆதார் இணைப்பு: முதலீடு போன்றே சேமிப்பு சார்ந்த பரிவர்த்தனைகளிலும், ஆதார் இணைப்பு செய்வது அவசியமாகிறது. அஞ்சல் அலுவலக திட்டங்கள் பலதும் இந்த வகையில் அடங்கும்.

பழனி முருகன் கோயிலில் செல்போனுக்கு தடை: கோயில் வளாகங்களில் செல்போன் கொண்டு செல்வதற்கு தடைவிதிக்கும் கோயில்களின் பட்டியலில் பழனி முருகன் கோயிலும் சேர்கிறது.

பிரதான ஆவணமாகும் பிறப்பு சான்றிதழ்: ஆதார் எண், வாக்காளர் பதிவு, ரேஷன் கடை, ஓட்டுநர் உரிமம், பத்திரப்பதிவு, பள்ளி/கல்லூரிகளில் சேர்க்கை, திருமண பதிவு உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகளிலும் இனி பிறப்பு சான்றிதழை பிரதான ஆவணமாக பயன்படுத்தலாம்.

ஆன்லைன் விளையாட்டு: ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஜிஎஸ்டி வரி இனி 28 சதவீதமாக வசூலிக்கப்படும்.

குடிநீர் கட்டணம் ஆன்லைனில் மட்டுமே: அக்டோபர் முதல் குடிநீர் கட்டணம் உள்ளிட்ட மாநகராட்சி சேவைக்கான வரிகள் மற்றும் கட்டணங்களை இனி ரொக்கமாக செலுத்த இயலாது. டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங், யுபிஐ உள்ளிட்ட ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே அனுமதி உண்டு. அதற்கு வாய்ப்பில்லாதவர்கள் காசோலை மற்றும் வரைவோலை மூலம் கட்டணத்தை செலுத்தலாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in