கூடங்குளம் அணு மின்நிலைய பணியாளர் தேர்வு ரத்து... போராட்ட அறிவிப்பால் பணிந்தது நிர்வாகம்!

கூடங்குளம் அணுமின் நிலையம்
கூடங்குளம் அணுமின் நிலையம்

கூடங்குளம் அணுமின் நிலைய பணியாளர் தேர்வு, விதிகளுக்கு புறம்பாக நடைபெறுகிறது என குற்றம்சாட்டி போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் சி-பிரிவு பணியாளர்கள் தேர்வு செய்வதற்கான தேர்வு, 3ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். முன்னதாக கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக ஆரம்ப கட்டத்தில் அப்பகுதியை சேர்ந்த பல்வேறு மக்கள் போராட்டம் நடத்தினர். இருப்பினும் பலரும் அணுமின் நிலையத்திற்காக நிலங்களை வழங்கியிருந்தனர். அந்த வகையில் நிலம் வழங்கியவர்களுக்கு முன்னுரிமை என்பது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அரசு அளித்திருந்தது. கடந்த 2011ம் ஆண்டு வரை இந்த நிலையே கடைப்பிடிக்கப்பட்டது.

தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு
தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு

இதனிடையே தற்போது நடைபெறும் தேர்வில் ஏற்கனவே நிலம் வழங்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. எனவே தேர்வு நடைபெறும் அன்று ராதாபுரம் மற்றும் கூடங்குளம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், கூடங்குளம் அணுமின் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். இது தொடர்பாக ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதியின் உறுப்பினரும் தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகருமான அப்பாவு, இந்திய அனுமின் உற்பத்தி கழக தலைவருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார்.

கூடங்குளம் அணுமின் நிலையம்
கூடங்குளம் அணுமின் நிலையம்

அந்த கடிதத்தில், நாளை நடைபெற இருக்கும் சி-பிரிவு தேர்வு, சட்டத்துக்கு புறம்பாக நடைபெறுவதால் அதனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். மேலும் கடந்த 1999ம் ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படியே சி-பிரிவுக்கான பணியாளர்கள் நியமனம் செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி இருந்தார்.

இந்த நிலையில் இது தொடர்பாக ராதாபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் கூடங்குளம் அணுமின் நிலைய அதிகாரிகள், மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மற்றும் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தவர்கள் ஆகியோர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நாளை நடைபெறுவதாக இருந்த தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக கூடங்குளம் அணுமின் நிலையம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

2 தொகுதிகள் தான்... திமுக கறார்: பேச்சுவார்த்தைக்குச் செல்லாமல் விசிக நிர்வாகிகளுடன் திருமா ஆலோசனை!

வெளிநாட்டு சுற்றுலா பயணி கூட்டு பாலியல் பலாத்காரம்: 7 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்!

பேருந்தில் நடந்த பயங்கர சம்பவம்.. நடிகை ஆண்ட்ரியா அதிர்ச்சி பேட்டி!

தபால் ஓட்டு... சீனியர் சிட்டிசன்களுக்கு முக்கிய அறிவிப்பு!

போதையில் தள்ளாடும் தமிழகம்... அரசின் மெத்தனப்போக்கு காரணமா? ஒன்று சேரும் எதிர்கட்சிகள்!?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in