11 வயதில் பேருந்தில் நடந்த பயங்கர சம்பவம்.. நடிகை ஆண்ட்ரியா அதிர்ச்சி பேட்டி!

நடிகை ஆண்ட்ரியா
நடிகை ஆண்ட்ரியா

தன் தந்தையுடன் 11 வயதில் பேருந்தில் பயணம் செய்த போது ஏற்பட்ட பயங்கர அனுபவத்தை நடிகை ஆண்ட்ரியா பகிர்ந்துள்ளார்.

நடிகை ஆண்ட்ரியா
நடிகை ஆண்ட்ரியா

சென்னையில் உள்ள ஆங்கிலோ இந்தியன் குடும்பத்தில் 1985-ம் ஆண்டு பிறந்தவர் ஆண்ட்ரியா. தனது பத்து வயதிலேயே இசைக்குழுவில் பாட ஆரம்பித்தார். இதன் பின் அவருக்குத் திரைப்படத்தில் பாடும் வாய்ப்பு கிட்டியது. கடந்த 2005-ம் ஆண்டு 'கண்ட நாள் முதல்' என்ற படத்தில் ஒரு கேமியோ ரோல் செய்யும் வாய்ப்பு ஆண்ட்ரியாவிற்கு கிடைத்தது.

இதன் பின் 2006-ம் ஆண்டு கௌதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் உருவான 'வேட்டையாடு விளையாடு' படத்தில் கமாலினி முகர்ஜிக்கு பின்னணி குரல் கொடுத்தார், 2007-ம் ஆண்டு சரத்குமாருடன் 'பச்சைக்கிளி முத்துச்சரம்' என்ற படத்தில் நடித்தார். இந்த படத்திற்காக ஆண்ட்ரியாவிற்கு சிறந்த அறிமுக நடிகைக்கான விஜய் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

நடிகை ஆண்ட்ரியா
நடிகை ஆண்ட்ரியா

இதன் பின் 'ஆயிரத்தில் ஒருவன்', 'மங்காத்தா', 'அரண்மனை',' தரமணி', 'துப்பறிவாளன்', 'விஸ்வரூபம் 2', 'வட சென்னை', 'மாஸ்டர்', 'அரண்மனை 3' போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் தனக்கு சிறுவயதில் நடந்த சம்பவம் குறித்து ஆண்ட்ரியா பேசியுள்ளார்.

அதில், "நானும், எனது தந்தையும் பேருந்தில் சென்று கொண்டிருந்தோம். அப்போது எனக்கு 11 வயது தான் இருக்கும். ஜீன்ஸ் மற்றும் டி-ஷர்ட் தான் நான் அணிந்திருந்தேன். அப்போது திடீரென ஒரு நபரின் கை எனது டி-ஷர்ட் உள்ளே வருவது போல் நான் உணர்ந்தேன். உடனடியாக அங்கிருந்து கொஞ்சம் முன்னாடி வந்து அமர்ந்துவிட்டேன்.

இந்த சம்பவத்தை தனது தாய், தந்தை இருவரிடமும் நான் கூறவில்லை. அது ஏன் என்று எனக்கு தெரியவில்லை. நான் ஏன் அதை என் பெற்றோரிடம் தெரிவிக்கவில்லை என்று எனக்குத் தெரியவில்லை. இந்த விஷயத்தைப் பற்றி எனது தந்தையிடம் சொன்னால் அதற்காக அவர் நடவடிக்கையை எடுத்திருப்பார். அதனால் தான் நான் செய்யவில்லை. ஏனென்றால் நாம் அந்த வகையில் நமது சமூகத்தால் வளர்க்கப்பட்டிருக்கிறோம். இதை பற்றியெல்லாம் நீங்கள் பெரிதாக பேச வேண்டாம் என்று சமூகம் விரும்புகிறது" என்று கூறியுள்ளார். அவரின் இந்த பேச்சு தற்போது வைரலாகி வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

இப்படியெல்லாம் வாக்கு சேகரிக்கக்கூடாது... அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை!

பெங்களூரு ஓட்டலில் டைமர் வெடிகுண்டு வெடிப்பில் தீவிரவாத சதியா?... என்ஐஏ தீவிர விசாரணை!

கோடிக் கணக்கான இளைஞர்களுக்கு அநீதி இழைக்காதீர்கள்... சு.வெங்கடேசன் எம்.பி கொந்தளிப்பு!

4+1 வேண்டும்... பிரேமலதா பிடிவாதம்: அதிமுக- தேமுதிக கூட்டணி நிலவரம்!

சரசரவென குறைந்த பூண்டு விலை...இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in