கொடைக்கானல் பள்ளங்கி கிராமம் அருகே உள்ள தனியார் நிலத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் வனப்பகுதிக்குள் தீ பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கோடைக்காலங்களில் வனம் மற்றும் மலைப்பகுதிகளில் தீப்பற்றுவது வாடிக்கை. இதனை தவிர்க்க வனத்துறையினர் தீ தடுப்பு கோடுகளை அமைப்பார்கள். இந்நிலையில், குளிர்காலம் முடிந்து இலையுதிர் காலம் துவங்கியுள்ளதால், தற்போது வனப்பகுதிகளில் மரங்கள் இலைகளை உதிர்க்க தொடங்கியுள்ளன. இந்நிலையில், மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக மலைப்பகுதி முழுவதும் வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது.
இதன் காரணமாக செடி, கொடிகள், புதர்வெளிகள் காய்ந்து, வருகின்றன. எனவே மலையின் வெவ்வேறு இடங்களில் தீ பற்றி எரிந்து வருகிறது. இந்நிலையில், கொடைக்கானல் பள்ளங்கி அடுத்த திண்ணையூர் அருகே தனியார் நிலத்தில் இன்று காலை திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது.
இதனால் அப்பகுதியில் உள்ள புல்வெளிகள், முட்புதர்களில் தீ பரவி மளமளவென எரிந்து வருகிறது. எனவே அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. காற்றின் வேகம் காரணமாக, மலைச் சரிவுகளில் தீ வேகமாக பரவி வருகிறது. இதனால், தீயின் அருகே சென்று அதனை அணைக்க முடியாமல் தீயணைப்புத்துறையினர் திணறி வருகின்றனர். மேலும், தீ மலைப்பகுதிகளில் பரவாமல் இருக்க கிராம மக்கள் தீ தடுப்பு கோடுகளை அமைத்து வருகின்றனர்.
வெப்பம் காரணமாக தீ பற்றி எரிந்ததா? யாரேனும் தீ வைத்தார்களா? என வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கோடைக்காலம் துவங்க உள்ள நிலையில் மலைப்பகுதியில் தீ பற்றும் அபாயம் உள்ளது. இதனால், வனத்துறையினர் தீ தடுப்பு கோடுகளை அமைத்து கண்காணிக்க, கொடைக்கானல் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் வாசிக்கலாமே...
ரசிகர்கள் அதிர்ச்சி... விஜய் கட்சிக்கு TVK பெயர் கிடைக்காது!?
அதிகாரிகளை அலறவிடும் ஆட்சியர்... திருப்பத்தூர் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி!
ரூ.200 கோடி சம்பளத்தை உதறிய விஜய்... பிரபல தயாரிப்பாளர் பரபரப்பு!
உதகையில் பயங்கர நிலச்சரிவு; மண்ணில் புதைந்து 7 பேர் பலியான சோகம்
தாயைக் கொன்ற மகன்... வழக்கில் திடீர் திருப்பம்... கணவனே மனைவியைக் கொன்றது அம்பலம்!