தமிழ்நாட்டை மிரட்டும் ரெமல் புயல்... 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

கனமழை
கனமழை
Updated on
2 min read

தமிழ்நாட்டில் ரெமல் புயல் காரணமாக 3 மாவட்டங்களில் கனமழை இன்று பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நேற்று நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு- வடகிழக்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று காலை 5.30 மணியளவில் வலுப்பெற்று, 8.30 மணியளவில் வங்கதேச கேப்புப்பாராவிலிருந்து சுமார் 440 கி.மீ தெற்கு-தென்மேற்கேயும், மேற்கு வங்காளம்- சாகர் ஐலன்ட்டிலிருந்து 440 கி.மீ தெற்கு-தென்கிழக்கேயும் மையம் கொண்டுள்ளது.

 ரெமல் புயல்
ரெமல் புயல்

இது வடக்கு திசையில் நகர்ந்து, இன்று ( மே 25) மாலை புயலாக வலுப்பெறக்கூடும். அதன் பிறகு இது வடக்குத் திசையில் நகர்ந்து, நாளை ( மே 26) காலை தீவிர புயலாக வலுப்பெற்று நள்ளிரவு வங்கதேச-கேப்புப்பாராவிற்கும் மேற்கு வங்காளம்- சாகர் தீவிற்கும் இடையே கரையை கடக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த புயலுக்கு ரெமல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த புயல் கரையைக் கடக்கும் நேரம் தரைக்காற்று மணிக்கு 110-120 கி.மீ வேகத்திலும், இடையிடையே 135 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த புயல் எதிரொலியாக தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

கனமழை
கனமழை

நாளை முதல் 31-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

கேன்ஸ் விழாவில் சிறந்த நடிகைக்கான விருது.. வரலாறு படைத்தார் இந்திய நடிகை!

நிறைமாத நிலவே வா... வா... நடிகை அமலபால் லேட்டஸ்ட் போட்டோஷூட்

ரூ. 640 கோடியில் மருமகளுக்குப் பரிசு... அசத்திய அம்பானி மனைவி!

சொகுசு ஓட்டலில் பிரதமர் மோடி தங்கியதில் ரூ.80 லட்சம் பில் பாக்கி... 18 சதவீத வட்டியுடன் செலுத்த எச்சரிக்கை!

ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகனுடன் மது விருந்து நடத்திய குற்றவாளி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in