மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை விலை... சவரனுக்கு ரூ.160 அதிகரிப்பு!

தங்கம் விலை உயர்வு
தங்கம் விலை உயர்வு

வாரத்தின் முதல் நாளான இன்று தங்கத்தின் விலை உயர்வுடன் தொடங்கியுள்ளது. கிராமுக்கு 20 ரூபாயும், சவரனுக்கு 160 ரூபாயும் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.

ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. கடந்த சனிக்கிழமை அன்று தங்கத்தின் விலை கிராமுக்கு பத்து ரூபாய் குறைந்து இருந்தது. இருப்பினும் தங்கம் விலை தொடர்ந்து உயர்வதற்கான வாய்ப்பு இருப்பதாக வணிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.

தங்கம்
தங்கம்

இந்த நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று தங்கத்தின் விலை உயர்வுடன் துவங்கியுள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 20 ரூபாய் உயர்ந்து ரூ.6,250 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 49 ஆயிரத்து 640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வாரத்தின் முதல் நாளிலேயே ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 வரை உயர்ந்திருப்பது பொதுமக்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தங்கம் அடுத்தடுத்த நாட்களில் விலை உயர்ந்து சவரனுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் கடக்கும் என்கிற கவலை பொதுமக்களிடையே நிலவி வருகிறது.

வெள்ளி நகைகள்
வெள்ளி நகைகள்

வெள்ளியின் விலையும் இன்று சற்று உயர்வைச் சந்தித்துள்ளது. 80 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு கிராம் வெள்ளி, இன்று 30 பைசா அதிகரித்து, 80 ரூபாய் 80 பைசாக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது ஒரு கிலோ பார் வெள்ளி 80,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

இன்றும், நாளையும் மின்சார ரயில்கள் கும்மிடிப்பூண்டிக்கு செல்லாது!

லடாக்கில் ஹோலி கொண்டாட்டம்... ராணுவ வீரர்களுடன் ராஜ்நாத் சிங் பங்கேற்பு!

பாஜக வேட்பாளரானார் கங்கனா ரணாவத்... இமாச்சலப் பிரதேசத்தில் போட்டி!

யாருக்கென்று வாக்கு கேட்பார் ஸ்டாலின்? வேட்பாளர் அறிவிக்காத நிலையில் நெல்லையில் பிரச்சாரம்!

'சிவசக்தி'க்கு சர்வதேச விண்வெளி யூனியன் அங்கீகாரம்... நிலவின் அந்த பகுதிக்கு இனி இதுதான் பெயர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in