
``புதிதாக குடும்ப அட்டைகள் வேண்டி விண்ணப்பித்துள்ளவர்களுக்கு பொங்கல் பண்டிகைக்குள் குடும்ப அட்டைகள் வழங்கப்படும்'' என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி உறுதியளித்துள்ளார்.
தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். "தற்போது பொது விநியோக கடைகளில் பயோமெட்ரிக் முறை அவ்வப்போது செயல் இழப்பதால் பொருட்களை விநியோகிப்பதில் தாமதம் ஏற்படுவதாக வந்த புகாரினையடுத்து அனைத்து ரேஷன் கடைகளிலும் கருவிழி பதிவின் மூலம் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மார்ச் மாதத்துக்குள் 30 சதவீத ரேஷன் கடைகளில் கருவிழி பதிவு திட்டம் நடைமுறைக்கு வரும். அதைத் தொடர்ந்து அடுத்த 9 மாதங்களுக்குள் இந்த திட்டம் அனைத்து ரேஷன் கடைகளிலும் செயல்படுத்தப்படவுள்ளது.
புதிய குடும்ப அட்டைகள் வேண்டி விண்ணப்பித்துள்ளவர்களுக்கு அவர்களது விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியானவர்களுக்கு புதிய குடும்ப அட்டைகள் அச்சடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அவற்றை பொங்கலுக்குள் பயனாளிகளுக்கு வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
இதையும் வாசிக்கலாமே...
இன்று 19 மாவட்டங்களில் கனமழை... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
சத்தீஸ்கர் வாக்குப்பதிவில் பரபரப்பு... குண்டுவெடிப்பில் பாதுகாப்பு படை வீரர் காயம்!
திமுகவுடன் கூட்டணியா? கமல் சொன்ன 'நச்' பதில்!
வீட்டை காலி செய்ய மிரட்டுகிறார்! நடிகர் பிரபுதேவா சகோதரர் மீது பரபரப்பு புகார்