எங்களை புதைத்துவிட்டு சிப்காட் அமைத்துக் கொள்ளுங்கள்… தமிழகத்தை கலங்கடிக்கும் விவசாயி மனைவியின் வீடியோ!

செய்யாறு விவசாயிகள் போராட்டம்
செய்யாறு விவசாயிகள் போராட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த மேல்மா கிராமத்திலுள்ள சிப்காட் விரிவாக்கம் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக மேல்மா, குரும்பூர், நர்மா பள்ளம், தேத்துறை, காட்டுக்குடிசை, நெடுங்கல் உள்ளிட்ட 11 கிராமங்களில், 3,174 ஏக்கர் விவசாய நிலத்தை அரசு கையகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. இதை எதிர்த்து, கடந்த 4ம் தேதி வரை அப்பகுதி மக்கள், தொடர்ந்து 126 நாட்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

கடந்த 4ம் தேதியன்று, போராட்டத்தை ஒடுக்கும் வகையில், 500க்கும் மேற்பட்ட போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை விரட்டியடித்தது. மேலும், போராட்டத்தை ஒருங்கிணைந்து நடத்திய 20 விவசாயிகளை கைது செய்தனர். அதில் 7 பேரை குண்டர் சட்டத்தில் போலீஸார் கைது செய்துள்ளனர். இது, விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

எழிலரசி
எழிலரசி

இந்நிலையில், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட விவசாயி மாசிலாமணியின் மனைவி எழிலரசி என்பவர் பேசிய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், தன் கணவரை கைது செய்ததற்கு, போலீஸ் தங்களை மிரட்டி கையெழுத்து பெற்றதாக கூறியுள்ளார். விவசாயிகளான தாங்கள், தங்கள் சொந்த நிலங்களை காக்கவே போராடுவதாகவும், அரசுக்கு சொந்தமான நிலத்திற்கு அல்ல என தெரிவித்துள்ளார். மேலும், விவசாயிகள் அனைவரையும் புதைத்துவிட்டு, சிப்காட் அமைத்துக் கொள்ளுங்கள் என்று உருக்கமாக பேசினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும், சமூக வலைதளங்களில் #விவசாயிக்கு_குண்டாஸ் என்ற ஹேஷ் டேக்கும் வைரலாகி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in