ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு மாற்றாக இதைக்கொடுங்க... சென்னையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

நல்லுசாமி, ஈசன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்
நல்லுசாமி, ஈசன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்

நியாய விலைக் கடையில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெயை விற்பனை செய்ய வலியுறுத்தி சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீஸார் கைது செய்தனர்.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

திமுக அரசு ஆட்சிக்கு வந்தால், நியாய விலைக்கடைகளில் பாமாயிலுக்கு மாற்றாக தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் மானிய விலையில் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், திமுக தேர்தலின் போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற கோரி தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பினர் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே சுமார் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

அப்போது, தமிழ்நாடு விவசாய சங்கங்களின் நிறுவனத் தலைவர் ஈசன் மற்றும் செல்லத்துரை ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அதில், “தேங்காய், கடலை, எள் என எல்லாமே தமிழகத்தில் கிடைக்கின்றது. அப்படி இருக்கும்போது, நியாய விலை கடைகளில் தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய்களை விற்பனை செய்யாமல் உடலுக்கு பெரிதும் தீங்கு விளைவிக்க கூடிய பாமாயில் எண்ணெயை அரசாங்கம் விற்பனை செய்வது ஏன்?. திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி நியாய விலை கடைகளில் மானிய விலையில் பாமாயில் விற்பனை செய்வதற்கு பதிலாக தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெயை விற்பனை செய்ய வேண்டும்.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

பாமாயில் விற்பனை செய்வதால் அரசுக்கு நஷ்டம் தான் ஏற்படுகிறது. மத்திய, மாநில அரசுக்கு பல்லாயிரம் கோடி நஷ்டத்தை தவிர்க்க எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 150க்கும் மேற்பட்ட விவசாயிகளை காவல்துறையினர் கைது செய்து புதுப்பேட்டையில் உள்ள சமூக நலக் கூடத்தில் தங்க வைத்தனர்.

இதையும் வாசிக்கலாமே...

ரசிகர்கள் அதிர்ச்சி... விஜய் கட்சிக்கு TVK பெயர் கிடைக்காது!?

அதிகாரிகளை அலறவிடும் ஆட்சியர்... திருப்பத்தூர் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி!

ரூ.200 கோடி சம்பளத்தை உதறிய விஜய்... பிரபல தயாரிப்பாளர் பரபரப்பு!

உதகையில் பயங்கர நிலச்சரிவு; மண்ணில் புதைந்து 7 பேர் பலியான சோகம்

தாயைக் கொன்ற மகன்... வழக்கில் திடீர் திருப்பம்... கணவனே மனைவியைக் கொன்றது அம்பலம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in