‘ஹேப்பி ஸ்ட்ரீட் கொண்டாட்டம் பெயரில் குத்தாட்டம் போடுவோருக்கு ஆயுள் தண்டனை’ நடிகர் ரஞ்சித் கொந்தளிப்பு!

வள்ளி கும்மி
வள்ளி கும்மி

’ஹேப்பி ஸ்ட்ரீட்,  ஹேப்பி சண்டே’ என்ற பெயரில் அரைகுறை உடையுடன் ஆடுவது சரியில்லை எனக் கூறியுள்ள நடிகர் ரஞ்சித்,  தனக்கு அதிகாரம் இருந்தால் அவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்குவேன் என்றும் கொந்தளித்துள்ளார்.

கோவை சவுரிபாளையத்தில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்ட  பாரம்பரிய வள்ளி கும்மியாட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரஞ்சித் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.  "நான் பிறந்த மண்ணில் நிற்பது எனக்கு பெருமையாக இருக்கிறது. நமது கலாச்சாரமான வள்ளி கும்மியாட்டம், கோலாட்டம், குச்சி ஆட்டம்  போன்ற கலைகள் தற்போது மண்ணோடு மண்ணாக போய்விட்டது.

நான் ஒரு திரைப்படக் கலைஞராக சொல்றேன், இன்றைய காலகட்டத்தில் சினிமா நடிகர்கள் துணிக்கடை திறப்பு விழாவிற்கு கூட 5 லட்சம் முதல் 7 லட்சம்  வரை பணம் வாங்கிக் கொண்டுதான் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள்.

நடிகர் ரஞ்சித்
நடிகர் ரஞ்சித்

அந்த காலத்தில் குழந்தையைத் தொட்டிலில் போடும்போதும், வயலில் வேலை செய்யும் போதும் கும்மி பாடி ஆனந்தமாக இருந்தார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் அனைத்துக்கும் செல்போனை பயன்படுத்துகிறார்கள். செல்போனைத்தான் காதலிக்கிறோமே தவிர, மனிதர்களை யாரும் காதலிக்கவில்லை. இந்த வள்ளி கும்மியாட்டம் மருமகள், மாமியார், பேரன், பேத்தி ஆகியோர் ஒன்றிணைந்த ஆடும் ஆட்டம் ஆகும்.

ஆனால்,'ஹேப்பி ஸ்ட்ரீட்','ஹேப்பி சண்டே' என்கிற பெயரில் பெண்கள் அரைகுறை ஆடையுடன் நடுரோட்டில் ஆடுவது மிகவும் வேதனை அளிக்கிறது. எனக்கு அரசு அதிகாரி என்ற ஒரு அதிகாரம் இருந்தால் இவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்குவேன். இது போன்ற கலாச்சாரம் அடுத்த பேரழிவை நோக்கி எடுத்துச் செல்லும். 

முதலில் மொபைல் போன் பேசுவதற்காக பயன்படுத்தப்பட்டது. ஆனால் இன்று ஆபாச படம் பார்ப்பதற்காக மொபைல் போன் பயன்படுத்துகிறார்கள். ஹேப்பி சண்டே, ஹேப்பி ஸ்ட்ரீட் என மோசமான கலாச்சாரத்தை நாம் வளர விடக்கூடாது. ஹேப்பி சண்டேயை  ஊக்குவிப்பதை விட இதுபோல பாரம்பரிய கலாச்சாரமான வள்ளி கும்மி ஆட்டத்தை ஊக்குவித்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும்" என்று ரஞ்சித் கேட்டுக் கொண்டார்.

இதையும் வாசிக்கலாமே...

பரபரப்பு… காஞ்சிபுரத்தில் அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல்!

கணவர் மிரட்டுகிறார்... காவல்துறையில் முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்கா புகார்!

பத்து தொகுதிகள்... பலிக்குமா பாஜக போடும் கணக்கு?

ஆதிக்கம் செலுத்தப்போவது யார்? இந்தியா – தென்னாப்பிரிக்கா இன்று மோதல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in