பதற்றம்! சிப்காட்டுக்கு எதிராக போராட்டம்; விவசாயிகள் 7 பேர் குண்டர் சட்டத்தில் கைது!

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்
Updated on
2 min read

செய்யாறு அருகே சிப்காட் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகள் 7 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே சிப்காட் அலகு3 திட்டத்தை கைவிடக் கோரியும்ம் தொழிற்பேட்டைக்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்தும் மேல்மா பகுதி விவசாயிகள் கடந்த ஜூலை 7ம்தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். செய்யாறு சிப்காட் தொழிற்பேட்டை விரிவாக்கப் பகுதி எனப்படும் அலகு3 பகுதியில் அனக்காவூர் ஒன்றியம் தேத்துறை உள்வட்டத்தைச் சேர்ந்த வட ஆளப்பிறந்தான், மேல்மா, தேத்துறை, இளநீர்குன்றம் குரும்பூர், நர்மபல்லம், அத்தி, வீரம்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் 3,174 ஏக்கரில் விவசாய நிலங்கள் இருந்து வருகின்றனர்.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

சிப்காட் தொழிற்பேட்டைக்கு மேல்மா பகுதி விவசாயிகளுக்கு சொந்தமான நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேல்மா உள்ளிட்ட 9 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் சார்பில் மேல்மா கூட்டுசாலை அருகே கடந்த ஜூலை 7ம் தேதி முதல் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். இந்த போராட்டம் 126வது நாளை இன்று நடைபெற்று வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் மீது 11 வழக்குகளை காவல்துறையின பதிவு செய்துள்ளனர்.

காத்திருப்பு போராட்டம், சாலை மறியல், நடைபயணம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை விவசாயிகள் நடத்தி வந்தனர். கடந்த 4ம் தேதி விவசாயிகள் நடைபயணம் சென்றபோது பேருந்து கண்ணாடிகளை உடைத்ததாக 20 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், அருண், பச்சையப்பன், மாசிலாமணி, தேவன், பாக்யராஜ், சோழன், விஜயன் ஆகிய 7 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in