‘ஜெயிலர் 2’ - மீண்டும் இணையும் ரஜினிகாந்த் - நெல்சன் கூட்டணி!

‘ஜெயிலர் 2’ - மீண்டும் இணையும் ரஜினிகாந்த் - நெல்சன் கூட்டணி!

‘ஜெயிலர்’ படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்த் - நெல்சன் கூட்டணி இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயிலர்’ படத்துக்குப் பின்னர் நடிகர் தனுஷை இயக்குநர் நெல்சன் இயக்குவார் என சொல்லப்பட்டது. இந்த நிலையில், நெல்சனை நேரில் அழைத்த ரஜினிகாந்த் ‘ஜெயிலர் 2’ படத்துக்கான கதையை தயார் செய்ய சொல்லியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினியே அழைத்து சொன்னதால் உற்சாகமான நெல்சன், தீவிரமாக கதையை தயார் செய்து வருகிறாராம். இந்த படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கலாம் என தெரிகிறது.

ரஜினி ‘ஜெயிலர்’ படத்தின் வெற்றியினை தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இடையில் சில காலம் தோல்வி முகத்தில் இருந்த ரஜினி நெல்சனின் இயக்கத்தில் வெளியான ‘ஜெயிலர்’ படத்தின் மூலம் தரமான கம்பேக் கொடுத்தார். அப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை தேடி தந்தது. இதையடுத்து மீண்டும் மார்க்கெட்டில் முதலிடத்தை பிடித்த ரஜினி தொடர் வெற்றிகளை குவிக்கும் முனைப்பில் இருக்கின்றார்.

அந்த வகையில் ஞானவேலின் இயக்கத்தில் தலைவர் 170 படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் நடிக்க இருக்கின்றார். இவ்வாறு வித்தியாசமான படங்களை இயக்கும் இயக்குநர்களுடன் ரஜினி கூட்டணி அமைத்துள்ளது ரசிகர்களின் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. இதை தவிர மகள் ஐஸ்வர்யாவின் இயக்கத்தில் உருவாகும் லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் ரஜினி.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in