ஷமி மீது கேஸ் போட மாட்டீங்கள்ல? மும்பை போலீஸை ஜாலியாக வம்பிழுத்த டெல்லி போலீஸ்!

ஷமி மீது கேஸ் போட மாட்டீங்கள்ல? மும்பை போலீஸை ஜாலியாக வம்பிழுத்த டெல்லி போலீஸ்!

Published on

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப்போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்தை 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணிக்கு சவாலாக விளங்கிய முக்கிய விக்கெட்டுகள் அனைத்தையும் ஒற்றை ஆளாக வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி வீழ்த்தி வெற்றிக்கு வழிவகுத்தார். அவர் நேற்றைய போட்டியில் 7 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

முகம்மது ஷமியின் சிறப்பான பந்து வீச்சை பிரதமர் மோடி முதல் சாமானியர்கள் வரை பலரும் பாராட்டினர். அந்த வகையில், ஷமியின் பந்து வீச்சை பாராட்டும் விதமாக டெல்லி போலீஸார், மும்பை போலீஸை ஜாலியாக வம்பிழுத்து பதிவிட்டுள்ளது சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. டெல்லி காவல்துறை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நியூசிலாந்து அணி மீது முகமது ஷமி நடத்தியுள்ள தாக்குதலுக்கு அவர் மீது மும்பை போலீஸ் வழக்குப்பதிவு செய்யாது என்று நம்புகிறோம் என பதிவிட்டு இருந்தது.

இதற்கு பதிலளித்த மும்பை போலீஸார், நீங்கள் கோடிக்கணக்கான மக்களின் இதயத்தை கொள்ளையடித்த குற்றத்தை கூற தவறிவிட்டீர்கள் என கூறியிருந்தது. மேலும், நேற்றைய ஆட்டத்தில் ஷமியுடன் சேர்ந்து மேலும், இரண்டு பேர் குற்றம் புரிந்ததையும் நீங்க குறிப்பிட மறந்துவிட்டீர்கள் என அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. டெல்லி மற்றும் மும்பை போலீஸார் இடையே நடந்த ஜாலியான பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

x
காமதேனு
kamadenu.hindutamil.in