கணவன் தற்கொலை... அதிர்ச்சியில் மனைவி, 2 மகள்களும் உயிரை மாய்த்த பரிதாபம்; மதுரையில் சோகம்

தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட குடும்பம்
தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட குடும்பம்

மதுரையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன் - மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகள் என நால்வரும் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மது
மது

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே தொட்டியப்பட்டியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர், தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர், மனைவி வீரசெல்வி, மகள்கள் தனுஸ்ரீ (13 ), மேகா ஸ்ரீ (8) உடன் வசித்து வந்தார். வீரசெல்விக்கு ஆசிரியர் பணி கிடைத்த நிலையில், மதுரை அனுப்பானடி பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார். இந்நிலையில், வேலையை விட்ட செந்தில்குமார், மனைவிடம் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்து மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். வேறு வேலைக்கு செல்லாமல், பொறுப்பில்லாமல் சுற்றி வந்ததால், கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4பேர் தற்கொலை
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4பேர் தற்கொலை

இந்நிலையில் செந்தில்குமார் திடீரென சிலைமான் பகுதியில் வைகையாற்று கரையோரத்தில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மனைவி வீரசெல்வியிடம், போலீசார் தகவல் அளித்தனர். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், வீட்டினுள் பூட்டிக் கொண்டார். இன்று காலை நீண்ட நேரமாகியும் வெளியே வராததால், ஜன்னல் வழியாக பார்த்தபோது, வீரசெல்வி அவரது 2 மகள்களுடன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. அங்கு விரைந்து வந்த தெப்பக்குளம் போலீசார், மூவரின் சடலங்களை கைப்பற்றி அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பிவைத்தனர். இது குறித்து தெப்பக்குளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரு குடும்பத்தில் 4 பேர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 8 மற்றும் 4ஆம் வகுப்புகள் படித்துக்கொண்டிருந்த பெண் குழந்தைகளும் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

2 தொகுதிகள் தான்... திமுக கறார்: பேச்சுவார்த்தைக்குச் செல்லாமல் விசிக நிர்வாகிகளுடன் திருமா ஆலோசனை!

வெளிநாட்டு சுற்றுலா பயணி கூட்டு பாலியல் பலாத்காரம்: 7 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்!

பேருந்தில் நடந்த பயங்கர சம்பவம்.. நடிகை ஆண்ட்ரியா அதிர்ச்சி பேட்டி!

தபால் ஓட்டு... சீனியர் சிட்டிசன்களுக்கு முக்கிய அறிவிப்பு!

போதையில் தள்ளாடும் தமிழகம்... அரசின் மெத்தனப்போக்கு காரணமா? ஒன்று சேரும் எதிர்கட்சிகள்!?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in