ரோகித் ஷர்மா அஜித் அகர்கர்
ரோகித் ஷர்மா அஜித் அகர்கர்

ஹர்திக் பாண்டியா துணை கேப்டனானது ஏன்? கே.எல்.ராகுலை நீக்கியது ஏன்? - தேர்வுக்குழு விளக்கம்

டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டது மற்றும் கே.எல்.ராகுல் அணியில் இடம்பெறாதது உள்ளிட்ட பல கேள்விகளுக்கு என்று தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் பதிலளித்துள்ளார்.

பரபரப்பாக நடந்துவரும் 2024 ஐபிஎல் தொடர் வரும் மே 26-ம் தேதி முடிவடையும் நிலையில், டி20 உலகக்கோப்பை தொடரானது ஜூன் 2-ம் தேதி முதல் நடைபெறவிருக்கிறது. இதற்கான இந்திய அணி நேற்று முன் தினம் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், உலகக்கோப்பை அணி தேர்வு குறித்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா மற்றும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் இருவரும் பல்வேறு கேள்விகளுக்கு விளக்கமளித்தனர்.

50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியின் போது காயம் காரணமாக விலகிய ஹர்திக் பாண்டியா, அதன்பின் நேரடியாக ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக தான் களமிறங்கியுள்ளார். இதற்கு இடையில் நடைபெற்ற எந்த சர்வதேச டி20 தொடர்களிலும் ஹர்திக் பாண்டியா விளையாடவில்லை. இந்த நிலையில் அவருக்கு டி20 உலகக்கோப்பையில் துணை கேப்டன் பதவி வழங்கியது ஏன் என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பினர். இதுதொடர்பாக தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கம் கொடுத்துள்ளார்.

ரோகித் ஷர்மா ஹர்திக் பாண்டியா
ரோகித் ஷர்மா ஹர்திக் பாண்டியா

அவரின் பதிலில், “ஹர்திக் பாண்டியாவின் துணை கேப்டன் பதவி குறித்து எந்த விவாதமும் நடத்தப்படவில்லை. இந்திய அணியின் அனைத்து வீரர்களில் உச்சக்கட்ட ஃபார்மில் இருக்க வேண்டும் என்பது மட்டுமே நோக்கம். நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் இந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியா திரும்பி இருக்கிறார். ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக இதுவரை அனைத்து போட்டிகளிலும் களமிறங்கி இருக்கிறார். ஹர்திக் பாண்டியாவால் இந்திய அணியில் நல்ல பேலன்ஸ் கிடைக்கிறது. ஒரு கிரிக்கெட் வீரராக அவரின் செயல்பாடுகளுக்கு வேறு யாரும் மாற்று கிடையாது. அவர் அணியில் இருந்தால், ரோகித் ஷர்மாவால் சிறந்த காம்பினேஷனில் விளையாட முடியும். அவரின் ஃபிட்னஸ் முக்கியமானது.

ஆல்ரவுண்டர்களின் பணி முக்கியமானது. சிவம் துபே பவுலிங்கில் சில ஓவர்கள் பங்களிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்பினால், நிச்சயம் செய்வார். அதேபோல் ஹர்திக் பாண்டியாவும் இருக்கிறார். ஆல்ரவுண்டர்கள் அவர்களின் பணியை செய்வார்கள். அதேபோல் இந்திய அணியை சில டி20 தொடர்களில் ஹர்திக் பாண்டியா வழிநடத்தியுள்ளார். உலகக்கோப்பையில் இருந்தே ரோகித் சர்மா சரியான ஃபார்மில் இருக்கிறார். கேப்டனாக ரோகித் சர்மா தேர்வு செய்யப்பட்டதில் எந்தவித கட்டாயமும் எங்களுக்கு ஏற்படவில்லை” என்று கூறினார்

கே.எல்.ராகுல்
கே.எல்.ராகுல்

அதேபோல அணியில் ரிங்கு சிங், கேஎல் ராகுல், நடராஜன் முதலிய வீரர்களுக்கு ஏன் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்ற கேள்வி பல முன்னாள் வீரர்களால் அதிகமாக எழுப்ப்பட்ட நிலையில், அதற்கான விளக்கத்தையும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் கூறியுள்ளார். அவர், "ரிங்கு சிங் குறித்த தேர்வு எங்களுக்கே மிகவும் கடினமான ஒரு முடிவாக இருந்தது. உண்மையில் ரிங்கு சிங் எந்ததவறும் செய்யவில்லை. அவர் எங்களின் ரிசர்வ் வீரராக இருக்கிறார், அதிலிருந்தே நீங்கள் தெரிந்துகொள்ளலாம் ரிங்குசிங் தேர்வானது எவ்வளவு சிரமமானதாக இருந்திருக்கும் என்று. அதேதான் சுப்மன் கில் விசயத்திலும் நடந்தது, எங்களுக்கு கூடுதலாக பந்துவீச்சு இருப்பது தேவை என்று உணர்ந்ததால் இந்த முடிவை எடுத்தோம்.

கேஎல் ராகுல் தொடர்ந்து ஐபிஎல்லில் தொடக்க வீரராக விளையாடுகிறார். ஆனால் எங்களுடைய விருப்பம் மிடில் ஆர்டரில் பொருந்தும் வீரர்களாக இருந்தது. அதனால் தான் ரிஷப் பண்ட் மற்றும் சஞ்சு சாம்சன் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சஞ்சு சாம்சன் போன்ற வீரர் எந்த இடத்திலும் சிறப்பாக விளையாட கூடியவர் என்பது எங்களுக்கு கூடுதல் தேவையாக இருந்தது. எங்களுடைய தேர்வு யார் சிறந்தவர் என்பதை பற்றியல்ல, யார் அணிக்கு தேவையானவர் என்பதை பொறுத்தே இருந்தது" என்று விளக்கமளித்தார்.

இதையும் வாசிக்கலாமே...

உருவாகிறது ரஜினிகாந்த் பயோபிக்... தனுஷின் ஆசை நிறைவேறுமா?

நடிகை ஸ்ரீதேவியுடன் புகைபிடிக்கும் ராம்கோபால் வர்மா... மார்ஃபிங் புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி!

பெட்ரோல் பங்க் ஊழியரை முகம் சுளிக்க வைத்த பெண்... வைரலாகும் வீடியோ!

காதல் விவகாரத்தில் விபரீதம்... 4-வது மாடியில் இருந்து கீழே குதித்து கல்லூரி மாணவி தற்கொலை!

கோவிஷீல்ட் தடுப்பூசியால் மகள் மரணம்; சீரம் இன்ஸ்டிடியூட் மீது பெற்றோர் வழக்குப்பதிவு!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in