முதல் முறையாக கோப்பை... ஆர்சிபி வீராங்கனைகளை வீடியோ காலில் வாழ்த்திய விராட் கோலி!

முதல் முறையாக கோப்பை... ஆர்சிபி வீராங்கனைகளை வீடியோ காலில் வாழ்த்திய விராட் கோலி!

2024 மகளிர் ஐபிஎல் தொடரை முதல்முறையாக வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு, விராட் கோலி வீடியோ காலில் வாழ்த்துச் சொல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.

கோப்பையா வென்ற பெங்களூரு அணி
கோப்பையா வென்ற பெங்களூரு அணி

2024 மகளிர் ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்தப் போட்டி நேற்று இரவு டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது.

இதையடுத்து 114 என எளிதான இலக்கை நோக்கி விளையாடத் தொடங்கிய பெங்களூரு அணிக்கு டெவைன் 32, மந்தனா 31 ரன்கள் எடுத்து சிறப்பான தொடக்கம் கொடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த எல்லிஸ் பெர்ரி 35 ரன்கள் அடித்தார். கடைசியில் 4 பந்துகளுக்கு 3 ரன்கள் தேவை என்ற நிலையில் பந்தை பவுண்ட்ரிக்கு விரட்டி ரிச்சா கோஸ், பெங்களூரு அணியை வெற்றிப் பெறச் செய்தார். இதையடுத்து, முதல் முறையாக பெங்களூரு அணி கோப்பையை வென்றுள்ளது.

பெண்களுக்கான டி20 கிரிக்கெட் போட்டியான WPL தொடங்கி 16 ஆண்டுகளில், முதல்முறையாக பெங்களூரு அணி கோப்பையை முத்தமிட்டுள்ளது. இதனால், பெங்களூரு அணி வீராங்கனைகள் உற்சாகத்தில் ஆனந்தக் கண்ணீரும் வடித்தனர். மைதானத்தில் வெற்றி உற்சாகத்தில் இருந்த வீராங்கனைகளுக்கு, இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி, வீடியோ காலில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார். கோலியை பார்த்ததும் வீராங்கனைகள், உற்சாகத்தில் துள்ளக் குதித்து நடனமாடி நன்றி தெரிவித்தனர்.

பதிலுக்கு எதிர்முனையில் இருந்த கோலியும் துள்ளி நடனமாடினார். தற்போது இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இறுதிப் போட்டி முடிந்து மைதானத்தில் இருக்கும்போதே வீடியோ காலில் அழைத்து வாழ்த்து தெரிவித்த கோலிக்கு, பெங்களூரு அணி வீராங்கனைகள் நன்றி தெரிவித்தனர்.

இதையும் வாசிக்கலாமே...

“இரட்டை இலை எனக்கே கிடைக்கணும் முருகா'!... திருச்செந்தூரில் ஓபிஎஸ் மனமுருகி பிரார்த்தனை!

'குக் வித் கோமாளி' பாலா செய்த தரமான சம்பவம்... வைரலாகும் வீடியோ!

1 முதல் 9-ம் வகுப்பு வரை இறுதித்தேர்வு எப்போது? பள்ளிக் கல்வித்துறை முடிவு!

விதிமுறைகளை மீறி பிறந்தநாள் கொண்டாட்டம்... காங்கிரஸ் எம்எல்ஏ மீது வழக்கு!

நீரை சேமிக்கும் புதுமையான டெக்னிக்... வைரலாகும் ஆனந்த் மஹிந்திராவின் ட்விட்டர் வீடியோ!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in