சச்சின் டெண்டுல்கரின் முழு உருவச் சிலை- நவம்பர் 1ம் தேதி அறிமுகம்!

சச்சின் டெண்டுல்கர்
சச்சின் டெண்டுல்கர்

இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் என்றும் உலக கிரிக்கெட் ரசிகர்களால் லிட்டில் மாஸ்டர் என்றும் அழைக்கப்படுபவர் சச்சின் டெண்டுல்கர். 100 சதம், 34,357 சர்வதேச ரன் என இவரது சாதனையை முறியடிக்க இனி ஒரு வீரர் இல்லை என்ற நிலையே உள்ளது.

கடந்த 2013ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற சச்சினுக்கு பெருமை சேர்க்கும் வகையில் மும்பை வான்கடே மைதானத்தின் ஒரு பகுதிக்கு சச்சின் டெண்டுல்கர் ஸ்டேண்ட் என பெயர் வைக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த ஏப்ரல் 24ம் தேதி அவர் தனது 50வது பிறந்தநாளை கொண்டாடினார்.

இதனை முன்னிட்டு அவரை கெளரவிக்கும் விதமாக சச்சினின் முழு உருவ சிலை ஒன்றை செய்து மைதானத்தில் நிறுவ மகாராஷ்டிர மாநில கிரிக்கெட் வாரியம் முடிவு செய்தது. கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளது. இதையடுத்து, வரும் நம்பர் 1ம் தேதி வான்கடே மைதானத்தில் இந்த சிலை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. நவம்பர் 2ம் தேதி இந்தியா - இலங்கை இடையிலான உலகக் கோப்பை ஆட்டத்தின் போது சச்சின் டெண்டுல்கர் ஸ்டேண்ட் அருகில் சிலை நிறுவப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in