ரசிகர்களுக்கு விருந்து... உலகக்கோப்பை கிரிக்கெட் : இன்று பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா பலப்பரீட்சை!

ரசிகர்களுக்கு விருந்து... உலகக்கோப்பை கிரிக்கெட் : இன்று பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா பலப்பரீட்சை!
Updated on
1 min read

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடம் பிடிக்கும் அணிகள் அடுத்துச் சுற்றுக்கு செல்லும் என்பதால், கடுமையான போட்டி நிலவுகிறது. தற்போது நியூசிலாந்து முதலிடத்திலும், இந்தியா 2-வது இடத்திலும் உள்ளன.

இந்நிலையில் சர்வதேச அளவில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. 18-வது போட்டியாக பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்றைய போட்டி நடைபெற உள்ளது. முதல் போட்டியில் இலங்கையை வீழ்த்திய ஆஸி. அடுத்த இரண்டு ஆட்டங்களில் தோல்வியை தழுவியுள்ளது.

பாகிஸ்தான் அணி, நடந்து முடிந்துள்ள மூன்று ஆட்டங்களில் இரண்டில் வெற்றி பெற்றுள்ளது. எனவே இன்றைய போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலிய அணி எழுச்சி பெற்று விளையாட வேண்டியது அவசியம்.

பேட்டிங்கில் ஜோஷ் இங்லிஸ், மிட்செல் மார்ஷ் தவிர வேறுயாரும் சோபிக்கவில்லை. அதே நேரத்தில் இந்தியாவுக்கு எதிராக தோல்வி அடைந்த பாகிஸ்தான் அணி, அதில் இருந்து மீள கடுமையாக முழு உத்வேகத்துடன் விளையாடும் என்பதில் சந்தேகம் இல்லை. எனவே இன்றைய போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in