10 லட்ச ரூபாய் செலவில் தன்னைத் தானே திருமணம் செய்து கொண்ட பெண்!

10 லட்ச ரூபாய் செலவில் தன்னைத் தானே திருமணம் செய்து கொண்ட பெண்!

எவ்வளவு தேடியும் சரியான வாழ்க்கை துணை கிடைக்காததால் இங்கிலாந்தை சேர்ந்த பெண் ஒருவர் தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டுள்ளார்.

உலகம் முழுவதும் பல நாடுகளிலும் தம்மைத் தாமே திருமணம் செய்துக் கொள்ளும் சோலோகாமி என்ற முறையை சில பெண்கள் கடைப்பிடித்து வருகின்றனர். கடந்த ஆண்டு குஜராத் மாநிலத்தை சேர்ந்த கஷமா பிந்து என்ற பெண் தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டார்.

அந்த வகையில் தற்போது இங்கிலாந்தில் சாரா வில்கின்சன் என்ற பெண் தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டுள்ளார்.  42 வயதாகும் சாரா வில்கின்சன், தன்னுடைய திருமணத்தை வெகு விமர்சையாக நடத்த வேண்டும் என்பதற்காக கடந்த 20 ஆண்டுகளாக பணத்தை சேகரித்து வந்தார்.

இதுவரை இந்திய மதிப்பில் 10 லட்ச ரூபாய்க்கும் மேல் சேமித்து வைத்துள்ள சாரா, தன்னுடைய 40வது பிறந்த நாளில் தனக்கான துணையைக் கண்டுபிடிக்கவில்லை என்றால், தன்னைத் தானே திருமணம் செய்துக்கொள்வேன் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்போது 42 வயதாகும் சாரா இத்தகைய முடிவை எடுத்துள்ளார். இதற்காக 20 ஆண்டுகளாக சேமித்து வைத்த 10 லட்ச ரூபாயை செலவழித்துள்ளார். நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பிரம்மாண்டமாக தனது திருமண விழாவைக் கொண்டாடி உள்ளார் சாரா.

ஹார்வெஸ்ட் ஹவுஸில் திருமண விழா நடைபெற்றது. அதில் மணப்பெண்ணுக்கான பிரத்யேக வெள்ளை கவுன், வைர மோதிரம், மூன்று அடுக்கு திருமண கேக், பெண் தோழிகளுக்கென்று தனி உடை என பல்வேறு  அம்சங்கள் இடம் பெற்றிருந்தன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in