
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 12 வது லீக் போட்டி அகமதாபாத் நகரில் நடைபெற்று வருகிறது. உலக கிரிக்கெட் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. முதலில் மட்டை எடுத்து ஆடிய பாகிஸ்தான் அணி, 18 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 90 ரன் எடுத்திருந்தது.
தொடக்க ஆட்டக்காரர்கள் அப்துல்லா ஷபிக் 20 ரன்னுக்கும், இமாம் - உல்ஹக் 36 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதையடுத்து, பாபர் அசாமும் முகமது ரிஸ்வானும் களத்தில் இறங்கினர். இந்தியா சார்பில் சிராஜ், ஹர்திக் பாண்டியா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
இதையும் வாசிக்கலாமே...