பேச மறுத்த காதலி... வெறித்தனமாய் 13 முறை கத்தியால் குத்திய காதலன்!

பேச மறுத்த காதலி... வெறித்தனமாய் 13 முறை கத்தியால் குத்திய காதலன்!

டெல்லியில் இளம்பெண்ணை 13 முறை கத்தியால் குத்திய இளைஞனை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த இளம்பெண் அதிஷ்டவசமாக உயிர்தப்பினார்.

டெல்லி லாடோ சாராய் பகுதியை சேர்ந்த இளம்பெண் பிராக்சி. இவர் கவுரவ் பால் என்ற இளைஞருடன் இரண்டு வருடங்களாக பழகி வந்ததாகக் கூறப்படுகிறது. இது பிராக்சியின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் பிராக்சியை கவுரவ் பாலுடன் பழகுவதை விட்டுவிடுமாறு வலியுறுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து கவுரவ் பாலுடன் பேசுவதை பிராக்சி தவிர்த்து வந்துள்ளார்.

பிராக்சியிடம் பல முறை பேச முயன்றும் அதனை அவர் உதாசீனப்படுத்தியதால் கவுரவ் கோபத்தில் இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் தனியார் கம்பெனியில் நடைபெறும் நேர்காணலுக்காக டாக்சியில் பிராக்சி ஏறியுள்ளார். அப்போது அவரை வழிமறித்த கவுரவ் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

வாக்குவாதம் முற்றிய நிலையில், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு பிராக்சியை 13 இடங்களில் சரமாரியாக குத்தியுள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் கத்தி கூச்சலிட்டனர். இதனையடுத்து அங்கிருந்த தப்ப முயன்ற கவுரவை பொதுமக்கள் பிடித்தனர். பிராக்சியை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் கவுரவை கைது செய்தனர். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த பிராக்சிஅபாயக்கட்டத்தைக் கடந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பட்டபகலில் இளம்பெண்ணை இளைஞர் கொலை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் வாசிக்கலாமே...

நாளை மகாளய பட்ச அமாவாசை: இந்த விஷயங்களை மறக்காதீங்க!

நடிகை சமந்தா மருத்துவமனையில் அனுமதி... ரசிகர்கள்  அதிர்ச்சி!

இந்த வருஷம் கேம்பஸ் இன்டர்வியூ கிடையாது.. பிரபல ஐடி நிறுவனம் அறிவிப்பு!

செம மாஸ் அறிவிப்பு... இன்று மெட்ரோ ரயிலில் பயணிக்க கட்டணம் கிடையாது!

மனைவி தற்கொலை... விரக்தியில் உயிரையிழந்த கணவர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in