மகாளய அமாவாசை... இதைச் செய்தால் கடன் தொல்லைத் தீரும்!

மகாளய அமாவாசை... இதைச் செய்தால் கடன் தொல்லைத் தீரும்!
Updated on
1 min read

பொதுவாகவே அமாவாசை தினங்கள் முன்னோர்களை வழிபட ஏற்ற நாளாக இருந்தாலும், புரட்டாசி மாதத்தில் வருகின்ற அமாவாசை தினம் கூடுதல் சிறப்பு வாய்ந்தவை. அமாவாசை நாளில், முன்னோர்களை நினைத்து அன்னதானம் செய்யவேண்டும். இதனால் நமக்கும் நம் சந்ததியினருக்கும் பித்ருக்களின் ஆசீர்வாதம் முழுமையாகக் கிடைக்கும். கடன் முதலான தொல்லைகளில் இருந்து விடுபடலாம்; கல்வி கேள்வியில் சிறந்து விளங்கலாம் என்பது ஐதீகம்.

அமாவாசை தர்ப்பணம் / சிரார்த்தம் / மகாளய அமாவாசை
அமாவாசை தர்ப்பணம் / சிரார்த்தம் / மகாளய அமாவாசை

அமாவாசை தினம் என்பது பித்ருக்களுக்கான நாள். பித்ருக்கள், நம்மை ஆசீர்வதிப்பதற்காக, பித்ருலோகத்திலிருந்து பூவுலகிற்கு வரும் நாள்.

மகாளயபட்ச காலம் என்று சொல்லப்படும் புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசையை, மகாளய பட்ச அமாவாசை என்று சொல்கிறோம். இந்த அமாவாசை தினம் மிக முக்கியமான தினம்.

அன்னதானம்
அன்னதானம்

புரட்டாசி அமாவாசை தினத்தில் நம் முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்து ஆத்மார்த்தமாகப் பிரார்த்தனை செய்து வழிபட்டால், 12 வருடங்கள் தர்ப்பணம் செய்யாமல் இருந்த பாவங்கள் நீங்கும் என்கிறது தர்ம சாஸ்திரம்.

காகத்தை சனீஸ்வர வாகனமாகவும் பார்க்கிற அதேவேளையில், நம் முன்னோர்களின் வடிவமாகவும் பார்க்கச் சொல்கிறது இந்து தர்மம். எனவே, தினமும் காகத்துக்கு சாதம் வைப்பது நற்பலன்களைக் கொடுக்கவல்லது. முக்கியமாக, அமாவாசை நாளில், காகத்துக்கு சாதமிடுவது முன்னோர்களின் பரிபூரண ஆசியை வழங்கும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள். இந்த தினத்தில் நாலு பேருக்காவது வயிறார, அவர்களின் பசி தீர உணவளித்தால் நம் கடன் பிரச்சினைகள் தீரும். நிச்சயம் பலனளிக்கக்கூடிய எளிய பரிகாரம். உங்கள் சக்திக்கேற்ப நாலுபேருக்காவது அன்னதானம் செய்து வாழ்க்கையில் கடன் சுமையிலிருந்து வெளியே வாருங்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in