மகளிர் மல்யுத்தம்... பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு 5-வது இந்திய வீராங்கனையாக தகுதி பெற்ற நிஷா தஹியா!

பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்த போட்டிக்கு நிஷா தஹியா தகுதி
பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்த போட்டிக்கு நிஷா தஹியா தகுதி

பாரீஸ் ஒலிம்பிக் தகுதிப் போட்டியில் ருமேனியாவின் அலெக்ஸாண்ட்ரா ஆங்கேலை வீழ்த்தி, இந்தியா சார்பில் 5-வது பெண் மல்யுத்த வீராங்கனையாக நிஷா தஹியா தகுதி பெற்றுள்ளார்.

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் ஒலிம்பிக் போட்டி, இந்த ஆண்டு ஜூலையில் பாரீஸில் நடைபெற உள்ளது. இதில் நடைபெறும் பல்வேறு போட்டிகளுக்கான தகுதிச் சுற்று போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், துருக்கியில் இஸ்தான்புல் நகரில் மகளிர் மல்யுத்தப் போட்டியில் 68 கிலோ எடைப்பிரிவுக்கான அரையிறுதிப் போட்டி நடைபெற்றது.

இதில் இந்தியாவின் நிஷா தஹியா, ருமேனியாவின் அலெக்ஸாண்ட்ரா அங்கெல்லை 8-4 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் தோற்கடித்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார். மேலும், இந்த வெற்றியின் மூலம் பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற இந்திய பெண் வீராங்கனைகளின் வரிசையில் நிஷா தஹியா 5-வதாக இடம்பெற்றார்.

நிஷா தஹியா ஏற்கெனவே, 23 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக மல்யுத்தத்தில் வெண்கலப் பதக்கமும், ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளார்.

கடந்த ஆண்டு 53 கிலோ பிரிவில் உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்ற ஆன்டிம் பங்கல், வினேஷ் போகட் (50 கிலோ), அன்ஷு மாலிக் (57 கிலோ), ரீடிகா ஹூடா (76 கிலோ) ஆகியோர் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற இதர 4 இந்திய வீராங்கனைகள் ஆவர்.

ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியா சார்பில் ஐந்து பெண் மல்யுத்த வீராங்கனைகள் பங்கேற்க உள்ளது இதுவே முதல் முறையாகும்.

இதையும் வாசிக்கலாமே...

அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு!

அடுத்த அதிர்ச்சி...  சிவகாசியில் மற்றொரு பட்டாசு ஆலையில் வெடிவிபத்து!

கனமழை: கரை புரண்டு ஓடும் வெள்ளத்தால் 50 பேர் பலி!

உக்ரைனுக்கு மேலும் 400 மில்லியன் டாலர் ராணுவ உதவி... அள்ளி வழங்கும் அமெரிக்கா!

மனைவி நடத்தையில் சந்தேகம்... 2 குழந்தைகளைக் கொன்று விட்டு கணவனும் தற்கொலை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in