ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரானார் ஜெய் ஷா - 3வது முறையாக நியமனம்!

ஜெய் ஷா
ஜெய் ஷா

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளர் ஜெய் ஷா, தொடர்ந்து 3வது முறையாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) தலைவராக இன்று ஒருமனதாக தேர்வானார்.

ஆசிய கிரிக்கெட் கவுன்சில்.
ஆசிய கிரிக்கெட் கவுன்சில்.

இந்தோனேசியாவின் பாலி தீவில் ஏசிசி வருடாந்திர பொதுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஏசிசி தலைவராக ஜெய் ஷா நீடிக்கும் தீர்மானத்தை இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர் ஷம்மி சில்வா இரண்டாவது முறையாக முன்மொழிந்தார். அதனை ஏசிசி-யின் அனைத்து உறுப்பினர்களும் ஒருமனதாக ஆதரித்தனர்.

ஜெய் ஷா, வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவர் நஸ்முல் ஹாசனுக்குப் பிறகு, ஏசிசி தலைவர் பொறுப்பை கடந்த 2021 ஜனவரியில் ஏற்றார். இவரது தலைமையின் கீழ், 2022ம் ஆண்டு ஆசியக் கோப்பை டி-20 கிரிக்கெட், 2023ம் ஆண்டில் ஆசிய கோப்பை ஒருநாள் போட்டியை ஏசிசி வெற்றிகரமாக நடத்தியது.

ஜெய் ஷா
ஜெய் ஷா

தொடர்ச்சியாக 3ம் முறையாக ஜெய் ஷா, ஏசிசி தலைவராக தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஏசிசி-ன் தொடர்ச்சியான நம்பிக்கைக்கு நான் அர்ப்பணிப்புடன் உள்ளேன். விளையாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியை உறுதி செய்வதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். குறிப்பாக இன்னும் ஆரம்ப நிலையில் உள்ள பிராந்தியங்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். ஆசியா முழுவதும் கிரிக்கெட் விளையாட்டை வளர்க்க ஏசிசி உறுதி பூண்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in