தினமும் 12 மணி நேர வேலை... வாரத்தில் 3 நாட்கள் விடுமுறை: பட்ஜெட்டில் புதிய அறிவிப்பு?

பட்ஜெட் 2024
பட்ஜெட் 2024
Updated on
2 min read

தினசரி வேலை நேரத்தை 12 மணி நேரமாக அதிகரித்தும், வார விடுமுறையை  மூன்று நாட்களாக உயர்த்திடவும்  மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக செய்திகள்  வெளியாகியுள்ளது. 

அரசு ஊழியர்கள்
அரசு ஊழியர்கள்

இந்தியாவில் தற்போது தினசரி எட்டு மணி நேர வேலையும் வாரத்திற்கு சனி, ஞாயிறு என இரண்டு நாள் விடுமுறையும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த முறையை மாற்றிட மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. 

இனி வாரத்திற்கு மூன்று நாட்கள் விடுமுறை கொள்கையை அறிமுகப்படுத்துவதற்கு மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளதாக புதிய செய்தி வெளியாகி உள்ளது.

இந்த புதிய நடைமுறையின்படி ஊழியர்கள் ஒரு நாளைக்கு பத்து முதல் 12 மணி நேரம் வரை என நான்கு நாட்களுக்கு வேலை செய்ய வேண்டும். அப்படி செய்தால் மீதமுள்ள மூன்று நாட்கள் அவர்களுக்கு விடுமுறை கிடைக்கும். மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக இடைக்கால பட்ஜெட் பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் இது தொடர்பான அறிவிப்புகள் பட்ஜெட்டில் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

பணியாளர்கள்
பணியாளர்கள்

காலம் காலமாக எட்டு மணி நேர வேலைக்கு பழகியுள்ள இந்திய தொழிலாளர்கள் இதனை எப்படி எதிர்கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த முறைக்கு நாட்டில் உள்ள தொழிற்சங்கங்கள்,  தொழிலாளர்கள் வரவேற்பு கொடுப்பார்களா அல்லது இதற்கு எதிர்ப்புகள் கிளம்புமா என்பது மத்திய அரசின்  அறிவிப்பிற்கு பின்னர்தான்  தெரிய வரும்.

இதையும் வாசிக்கலாமே...


தினமும் 12 மணி நேர வேலை... வாரத்தில் 3 நாட்கள் விடுமுறை: பட்ஜெட்டில் புதிய அறிவிப்பு?

ஐஐடி கல்வி நிறுவனத்திற்கு ரூ.110 கோடி நன்கொடை... அள்ளித் தந்த முன்னாள் மாணவரான பிரபல தொழிலதிபர்!

முதுகலை பல் மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு தேதி அறிவிப்பு!

வீடு புகுந்து மனைவி, காதலன் வெட்டிக் கொலை: முன்னாள் கணவர் வெறிச்செயல்!

பரபரப்பு...வாகனம் ஏற்றி விவசாய சங்க தலைவர் கொலை?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in