முதுகலை பல் மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு தேதி தேசிய தேர்வுகள் வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்காக நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களுக்கு நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல முதுநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வுகளும் தேசிய தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வுகளின் அடிப்படையிலேயே இளநிலை மற்றும் முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.
இந்த நிலையில் 2024 -் ஆண்டுக்கான முதுகலை பல் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடைபெறும் தேதி தேசிய தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி வரும் மார்ச் 18-ம் தேதி முதுநிலை பல் மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது . இதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க பிப்ரவரி 19-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
தேர்வு முடிவுகள் ஏப்ரல் 18-ம் தேதி வெளியாகும். இதுகுறித்த மேலும் தகவல்களுக்கு http://natboard.edu.in என்ற இணையதளத்தை அணுகலாம் என்று தேசிய தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.