நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதிப்போட்டி… டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது!

நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதிப்போட்டி… டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது!

இன்று நடைபெறும் நியூசிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்னும் சற்று நேரத்தில் துவங்க உள்ளது. இதில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துக்கின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது. இந்திய அணி இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இதுவரை விளையாடியுள்ள 9 லீக் போட்டிகளில் ஒன்றில்கூட தோல்வியடையாமல் உள்ளது. அதே உத்வேகத்தோடு இந்திய வீரர்கள் இன்றைய போட்டியில் களமிறங்கி விளையாடுவார்கள் என கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

நியூசிலாந்து அணி இந்தத் தொடரில் 4 லீக் போட்டிகளில் தோற்றுள்ளது. இருந்த போதும் இதுவரை நடந்துள்ள உலகக் கோப்பை தொடர் மற்றும் நாக் அவுட் போட்டிகளில் இந்தியாவுக்கு சிம்ம சொப்பனமாக இருந்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரிலும் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவை தோற்கடித்து அந்த அணி இறுதி போட்டிக்கு தகுதிபெற்றது குறிப்பிடத்தக்கது. இம்முறையும் அந்த அணி இந்தியாவுக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதால், இன்றைய போட்டி விறுவிறுப்புடன் அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

இதையும் வாசிக்கலாமே...

உஷார்; 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

மீண்டும் விலை உயரும் அபாயம்: தொடர்மழையால் செடியிலேயே அழுகும் தக்காளி!

மீண்டும் மீண்டுமா... அடுத்த சிக்கலில் மாட்டித் தவிக்கும் சிவகார்த்திகேயன்!

பிரதமர் மோடி குறித்து அவதூறு: ஆம் ஆத்மிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

கிராமத்தில் 20 முறைக்கும் மேல் மின்தடை: அதிகாரிகளைப் பழிவாங்க கவுன்சிலர் செய்த அதிர்ச்சி காரியம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in