பிரதமர் மோடி குறித்து அவதூறு: ஆம் ஆத்மிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

அர்விந்த் கேஜ்ரிவால்
அர்விந்த் கேஜ்ரிவால்
Updated on
1 min read

பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவு செய்ததாக  விளக்கம் கேட்டு  ஆம் ஆத்மி கட்சிக்கு  தேர்தல் ஆணையம்  நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஆம் ஆத்மி கட்சி, தொழிலதிபர் கெளதம் அதானி மற்றும் பிரதமர் மோடி ஆகியோரின் வீடியோவை புதன்கிழமை பகிர்ந்துள்ளது. அதைத் தொடர்ந்து, அந்த கட்சியினர் அடுத்த நாள் ஒரு படத்தை வெளியிட்டனர். பிரதமர் மக்களுக்காக வேலை செய்வதை விட தொழிலதிபருக்காக வேலை செய்கிறார் என்று அதில் குற்றம் சாட்டினர். 

மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, கட்சியின் தேசிய ஊடகப் பொறுப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான அனில் பலுனி, கட்சித் தலைவர் ஓம் பதக் உள்ளிட்ட பாஜக பிரதிநிதிகள் இந்த விவகாரத்தை தேர்தல் ஆணையத்திடம் கொண்டு சென்றனர். நவம்பர் 10-ம் தேதி பாஜக அளித்த புகாரைத் தொடர்ந்து ஆணையத்தால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

பிரதமர் மோடியை குறிவைத்து சமூக ஊடகத்தில் மிகவும் ஏற்றுக்கொள்ள முடியாத மற்றும் நெறிமுறையற்ற வீடியோ கிளிப் மற்றும் கருத்துக்களைப் பகிர்ந்ததற்காக ஆம் ஆத்மிக்கு எதிராக இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

"இந்தப் பதிவுகள் முதன்மையாக மாதிரி நடத்தை விதிகள் மற்றும் தேர்தல் மற்றும் தண்டனைச் சட்டங்களின் விதிகளை மீறுகின்றன. இதற்காக உரிய நடவடிக்கை ஏன் எடுக்கக் கூடாது  என நவம்பர் 16-ம் தேதிக்குள்  விளக்குமாறு கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது.

 "ஒரு கட்சியின் நட்சத்திரப் பிரச்சாரகருக்கு எதிராகக் கூறப்படும் சமூக ஊடகப் பதிவுகளில் கூறப்படும் அறிக்கைகள், குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கமளிக்க ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அழைப்பாளர் இதன் மூலம் அழைக்கப்படுகிறார்.

தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்

கட்சி மற்றும் அரசியல் கட்சிக்கு எதிராகவும், மாநிலத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு எதிராக உள்ளுறுத்தல்கள் மற்றும் சூழ்ச்சிகள் மூலமாகவும், தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காக தகுந்த நடவடிக்கையை உங்கள் மீது ஏன் எடுக்கக்கூடாது" என்று தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

"குறிப்பிட்ட காலத்திற்குள் உங்கள் தரப்பிலிருந்து எந்த பதிலும் வரவில்லை என்றால், இந்த விஷயத்தில் நீங்கள் எதுவும் சொல்ல முடியாது என்று கருதப்படும், மேலும் தேர்தல் ஆணையம் உங்களைப் பற்றி மேலும் குறிப்பிடாமல் உரிய நடவடிக்கை அல்லது முடிவை எடுக்கும்." என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in