மீண்டும் மீண்டுமா... அடுத்த சிக்கலில் மாட்டித் தவிக்கும் சிவகார்த்திகேயன்!

சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்

இசையமைப்பாளர் இமான், சிவகார்த்திகேயன் மீது சொன்ன குற்றச்சாட்டு பரபரப்பு இன்னும் ஓயாத நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது அடுத்த சிக்கலில் மாட்டியுள்ளது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் இசையமைப்பாளர் டி.இமான் தன்னுடைய பேட்டி ஒன்றில் நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்துவிட்டதாகவும் இதை அவரிடம் எதிர்பார்க்கவில்லை என்றும் இனிமேல் சிவகார்த்திகேயனுடன் இணைந்து பணிபுரிய வாய்ப்பே இல்லை என்றும் கூறியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து, டி.இமானின் முன்னாள் மனைவி மோனிகாவும், சிவகார்த்திகேயன் தங்கள் குடும்பத்தைச் சேர்த்து வைக்க முயற்சித்ததையே இமான் அவ்வாறு கூறியுள்ளார் எனப் பேட்டி கொடுத்தார். சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக மோனிகா இவ்வாறு பேசியது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது.

சிவகார்த்திகேயன் - இமான்
சிவகார்த்திகேயன் - இமான்

திரையுலகிலேயே பலரும் இந்தப் பிரச்சினைக்கு ஆதரவாகவும் எதிராகவும் பேசி வந்தனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கச் சொல்லி இமானிடம் கேட்டபோது, ”சரி, தவறு எது என்பது மனிதர்களைத் தாண்டி இறைவனுக்கு தெரியும் என்பதை நம்புவன் நான். இது எல்லாவற்றிற்கும் இறைவன் முற்றுப்புள்ளி வைப்பார் என நம்புகிறேன்” என்றார்.

இந்தப் பிரச்சினை நடிகர் சிவகார்த்திகேயனுக்கு தலைவலியை ஏற்படுத்திய நிலையில், இப்போது அடுத்தப் பிரச்சினை தலைத்தூக்கியுள்ளது. நடிப்பது மட்டுமல்லாது தயாரிப்பிலும் சிவகார்த்திகேயன் கவனம் செலுத்தி வருகிறார். இவர் தயாரித்த திரைப்படங்கள் மற்றும் இவரே வெளியிட்ட திரைப்படங்கள் மூலம் இவர் சந்தித்த கடன்களை உடனே தருமாறு சம்பந்தப்பட்டவர்கள் தற்போது சிக்கலை கிளப்பியுள்ளனர்.

சிவகார்த்திகேயன் - தனுஷ்
சிவகார்த்திகேயன் - தனுஷ்

இந்த பிரச்சினையை ஏற்படுத்தியதே தனுஷ்தான் என்ற பேச்சும் கோலிவுட் வட்டாரத்தில் அடிபடுகிறது. சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ படத்திற்கு பிரச்சினைகள் ஏற்படுத்தவே தனுஷ் தான் நடிக்கும் ’கேப்டன் மில்லர்’ திரைப்படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்வதாகவும் கூடவே இந்தப் பிரச்சினையையும் கிளப்பி விட்டதாகவும் சொல்லப்படுகிறது. இவை அனைத்தையும் தாண்டி சிவகார்த்திகேயன் தனது படத்தினை எவ்வாறு வெற்றியடைய செய்ய போகிறார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in