5 வீரர்கள் டக்அவுட்... இலங்கை 55 ரன்னுக்கு ஆல்அவுட்; முதல் அணியாக உலகக்கோப்பை அரையிறுதியில் இந்தியா!

5 வீரர்கள் டக்அவுட்... இலங்கை 55 ரன்னுக்கு ஆல்அவுட்; முதல் அணியாக உலகக்கோப்பை அரையிறுதியில் இந்தியா!

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி 55 ரன்னுக்கு ஆட்டமிழந்து மோசமான தோல்வியை சந்தித்தது. முதல் அணியாக அரையிறுதிக்குள் சென்றது இந்திய அணி.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 33-வது லீக் போட்டியில் இந்தியா- இலங்கை அணிகள் இன்று மோதின. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. பேட்டிங்கில் இந்திய அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா வெறும் 4 ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார். இவருடன் களமிறங்கிய சுப்மன் கில் சிறப்பாக விளையாடி 92 ரன்களை குவித்தார்.

அடுத்து களமிறங்கிய விராட் கோலி 88 ரன்களில் ஆட்டமிழந்தார். இவருடன் ஆடிய ஸ்ரேயஸ் அய்யர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் 82 ரன்களை எடுத்த போது அவுட் ஆனார். கே.எல்.ராகுல் 21 ரன்களில் ஆட்டமிழக்க, சூர்யகுமார் யாதவ் 12 ரன்களில் பெவிலியன் திரும்பினார். போட்டி முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 357 ரன்களை குவித்தது. இலங்கை சார்பில் தில்ஷான் மதுஷங்கா 5 விக்கெட்டுகளையும், துஷமந்தா சமீரா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

358 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமாக இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக பதும் நிசாங்கா- திமுத் கருணாரத்னே விளையாட வந்தனர். இலங்கை அணி ரன் கணக்கை தொடங்குவதற்குள் பும்ரா பந்தில் நிசாங்கா டக் அவுட்டாகி வெளியேறினார். இதன் பின்னர் கருணாரத்னே ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் கமிறங்கிய குசல் மெண்டிஸ் ஒரு ரன்னிலும், குசல் மெண்டிஸ் டக் அவுட்டாகியும் வெளியேறினர். சரித் அசலங்கா 1 ரன்னிலும், ஏஞ்சலோ மேத்யூஸ் 12 ரன்னிலும் ஆட்டமிழக்க, பின்னர் வந்த துஷன் இஷார ஹேமந்த, துஷ்மந்த சமீரா ஆகியோர் டக் அவுட்டானார்கள். முகமது சமியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஆட்டமிழந்தனர்.

அடுத்து வந்த கசுன் ராஜிதா 14 ரன்னிலும், தில்ஷான் மதுஷங்கா 5 ரன்னிலும் வெளியேறினர். மகீஷ் தீக்சனா 12 ரன்னில் கடைசி வரை ஆட்டமிழக்கவில்லை. 19.4 ஓவரில் இலங்கை அணி 55 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வியை சந்தித்தது. இந்திய அணி 302 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று முதல் அணியாக அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது.

இந்திய அணி தரப்பில் முகமது சமி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முகமது சிராஜ் 3 விக்கெட்டும், பும்ரா, ஜடேஜா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in