புதுச்சேரியில் பயங்கரம்; பிரபல ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை!

கொலை செய்யப்பட்ட பரத்
கொலை செய்யப்பட்ட பரத்

புதுச்சேரி கோவிந்தசாலை பகுதியைச் சேர்ந்தவர் பரத் (32), பிரபல ரவுடியான இவர் கடந்த சில மாதங்களாக புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்டில், ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். இவர் இன்று காலை புதிய பேருந்து நிலையம் அருகே தனது ஆட்டோவில் அமர்ந்திருந்தார்.

சம்பவ இடத்தில் போலீஸ் விசாரணை
சம்பவ இடத்தில் போலீஸ் விசாரணை

அப்போது மற்றொரு ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள், பரத்தை அரிவாளால் வெட்டினர். அவர்களிடம் இருந்து தப்பிய அவர் தலைதெறிக்க ஓடினார். ஆனாலும், விடாமல் விரட்டிய அந்த குடும்பல் பரத்தை ஓட ஓட சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்று தலைமறைவானது.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உருளையன்பேட்டை போலீஸார், பரத்தின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு கதிர்காமம் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட ரவுடி பரத் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும். அவரை வெட்டிக் கொலை செய்தது அவரின் நண்பர்கள் என்றும் தெரிய வந்துள்ளது. மேலும் குற்றவாளிகளை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

பழம்பெரும் நடிகர் ஜூனியர் பாலையா திடீர் மரணம்!

குட்நியூஸ்: பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

காங்கிரஸில் இணைகிறாரா நடிகை விஜயசாந்தி!?

அதிர்ச்சி! தொடர் மழை... வெள்ளத்தால் நனைத்து வீணாகிப்போன ரூ.400 கோடி வங்கிப் பணம்!

ஆசைப்பட்டா என்ன தப்பு? ரஜினியின் குட்டிக்கதைக்கு பதிலடி கொடுத்த விஜய்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in