விபத்துக்குள்ளான கார்... காப்பாற்றத் துடிக்காமல் மதுப்புட்டிகளை அள்ளிச் சென்ற மக்கள்!

காரிலிருந்து மதுப் புட்டிகளை அள்ளிச் செல்லும் மக்கள்...
காரிலிருந்து மதுப் புட்டிகளை அள்ளிச் செல்லும் மக்கள்...

பீகாரில் விபத்துக்குள்ளான  காரில் இருந்தவர்களை காப்பாற்றாமல் அதிலிருந்து மதுப்புட்டிகளை மக்கள் அள்ளிக் கொண்டு ஓடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைராகி வருகிறது. 

பீகாரில் மதுவிலக்கு அமலில் உள்ளது. அதனால் அங்கு மதுக் கடைகள் கிடையாது. இருப்பினும், பல பகுதிகளில் சமூக விரோதிகளால் மது தயாரிக்கப்பட்டும், அண்டை  மாநிலங்களில் இருந்து கடத்தி வரப்பட்டும் பொதுமக்களுக்கு சட்டவிரோதமாக மதுபானம் விற்கப்படுகிறது. இந்த நிலையில், கயா நகரப் பகுதியில் கடந்த  செவ்வாய்க்கிழமையன்று  கார் ஒன்று வேகமாகச் சென்றது. 

ஒரு கட்டத்தில் எதிர்பாராத விதமாக அந்த கார் விபத்தில் சிக்கியது.  அப்போது அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் காரிலிருந்தவர்களை காப்பாற்றும் நோக்கத்தோடு ஓடி வந்தனர். ஆனால், காரில் இருந்து கிளம்பிய மதுபான வாசனை அவர்களின் கவனத்தை திசை திருப்பியது. 

காரில் மதுப் புட்டிகள் பெட்டி பெட்டியாக இருப்பதைக்  கண்ட அவர்கள்  காரில் இருந்த மதுப் புட்டிகளை அள்ளிக் கொண்டு  ஓட்டம் பிடித்தனர். விபத்தில் சிக்கி காரில் இருந்தவர்கள் என்ன ஆனார்கள் என்று அவர்கள் கவலைப்படவில்லை. இதை அந்த வழியாக சென்ற யாரோ ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in