ஊழல் பணம் ரூ.1 லட்சம் கோடியை மக்களின் வங்கிக்கணக்கில் செலுத்துவோம் - ராகுல் காந்தி வாக்குறுதி!

ஊழல் பணம் ரூ.1 லட்சம் கோடியை மக்களின் வங்கிக்கணக்கில் செலுத்துவோம் - ராகுல் காந்தி வாக்குறுதி!

தெலங்கானா மக்களிடம் இருந்து சந்திரசேகர ராவ் கொள்ளையடித்த ரூ.1 லட்சம் கோடி பணம் மீண்டும் மக்களுக்கே திரும்ப வழங்கப்படும் என்று காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

தெலங்கானா மாநிலத்தில் இம்மாதம் 30ம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் பிஆர்எஸ், காங்கிரஸ், பாஜக இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. இம்மாநிலத்தில் 3 கட்சிகளும் தற்போது தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த சூழலில் கல்வார்குர்தி தொகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, தெலங்கானாவில் 2% வாக்குகளை கொண்டுள்ள பாஜகவால், பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த முதலமைச்சரை எப்படி கொடுக்க முடியும் என உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வாக்குறுதியை சுட்டிக் காட்டி கேள்வி எழுப்பினார்.

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பழங்குடியின மக்களின் நிலத்தை காலீஸ்வரம் நீர்ப்பாசன திட்டத்திற்காக விற்று பாரத் ராஷ்ட்ரிய சமிதி அரசு ரூ.1 லட்சம் கோடி ஊழல் செய்துள்ளதாக குற்றம் சாட்டிய ராகுல் காந்தி, மக்களிடம் கொள்ளையடிக்கப்பட்ட பணம், மீண்டும் மக்களுக்கே திரும்ப வழங்கப்படும் என்று உறுதி அளித்தார்.

காலீஸ்வரம் நீர்ப்பாசன திட்டம் ஆய்வு
காலீஸ்வரம் நீர்ப்பாசன திட்டம் ஆய்வு

இது தொடர்பாக பேசிய அவர், “உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் அடங்கி உள்ள தெலங்கானா மாநிலம் குறித்து மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். உங்கள் முதல்வர் பொது மக்களிடம் இருந்து கொள்ளையடித்துள்ளார். அதனால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். தெலங்கானா மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட அந்த தொகையை மீட்டு மக்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். பிரதமர் மோடியை போல் நான் வெறும் வாக்குறுதி மட்டும் கொடுப்பவன் அல்ல.ஒரு வாக்குறுதி அளித்தால் அதனை நிறைவேற்றுவேன்”என்று கூறியுள்ளார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மாதம் தோறும் பெண்களுக்கு ரூ.2,500 உதவித் தொகையும் எரிபொருள் சிலிண்டருக்கு மானியமாக ரூ.500 வழங்கப்படும் என்றும் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in