
2036-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் தொடரை இந்தியாவில் நடத்த திட்டமிட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மும்பையில் இன்று நடைபெற்ற சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர், "இந்தியாவில் நடைபெறும் அனைத்து பண்டிகைகளும் விளையாட்டுடன் தொடர்புடையதுதான். 2036-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் தொடரை இந்தியாவில் நடத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.
இது 140 கோடி இந்தியர்களின் நீண்ட கால கனவு. இந்த கனவை நனவாக்க சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஆதரவளிக்கும் என நான் நம்புகிறேன்" என்றார்.
ஜப்பானில் நடைபெற்ற கடந்த ஒலிம்பிக் தொடரில் இந்தியா ஒரு தங்கம், 2 வெள்ளி உட்பட 7 பதக்கங்களை வென்று 48-வது இடம் பிடித்திருந்தது. அடுத்தாண்டு பிரான்ஸ் தலைநகர் பாரீசிலும், 2028-ம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலும், 2032-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரிலும் ஒலிம்பிக் தொடர் நடைபெறும் என ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
இன்று நவராத்திரி திருவிழா ஆரம்பம்... என்னென்ன விசேஷம்? எப்படி கொண்டாடுவது?!
கருணாநிதியின் ‘மூத்த பிள்ளை’க்கு வந்த சோதனை!
ஒரு சிக்ஸர் கூட அடிக்கலை… 20 ஓவரில் 427 ரன்கள் எடுத்து மகளிர் கிரிக்கெட் அணி உலக சாதனை!
பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்… மத்திய அரசின் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்!
ஜீன்ஸ், லெக்கின்ஸ் போட்டு கோர்ட்டுக்கு வரக்கூடாது... வக்கீல்களுக்கு பார் கவுன்சில் கறார் உத்தரவு!