ஜீன்ஸ், லெக்கின்ஸ் போட்டு கோர்ட்டுக்கு வரக்கூடாது... வக்கீல்களுக்கு பார் கவுன்சில் கறார் உத்தரவு!

பார் கவுன்சில்
பார் கவுன்சில்

தமிழகம் மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்களுக்கு புதிய ஆடை கட்டுப்பாடு பார் கவுன்சிலால் விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல ஆயிரக்கணக்கான வழக்கறிஞர்கள் முறைப்படி பதிவு செய்து வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார்கள். அப்படி பணிபுரியும்  வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திற்கு வரும்போது சரியான ஆடை கட்டுப்பாட்டுடன் வர வேண்டும் என்று தொடர்ந்து  வலியுறுத்தப்பட்டு வந்தது. ஆனாலும், பல நீதிமன்றங்களில் பல வழக்கறிஞர்கள் ஆடை விஷயத்தில் உரிய வகையில்  அக்கறை காட்டுவதில்லை. 

வழக்கறிஞர்கள்
வழக்கறிஞர்கள்

இந்நிலையில் வழக்கறிஞர்களுக்கான ஆடைக்கட்டுப்பாடுகள் விதித்து பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நீதிமன்றங்களுக்கு செல்லும் வழக்கறிஞர்கள் ஜீன்ஸ் பேண்ட், முக்கால் பேண்ட், லெக்கின்ஸ் போன்ற ஆடைகளை அணியக் கூடாது. அதேபோல  நீதிமன்றங்களைத் தவிர மற்ற பொது இடங்களில் கழுத்துப் பட்டையையோ, வக்கீல் கவுனையோ அணியக்கூடாது என்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவை  வெளியிட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in