இன்று நவராத்திரி திருவிழா ஆரம்பம்... என்னென்ன விசேஷம்? எப்படி கொண்டாடுவது?!

இன்று நவராத்திரி திருவிழா ஆரம்பம்... என்னென்ன விசேஷம்? எப்படி கொண்டாடுவது?!

இன்று கோலாகலத்துடன் நவராத்திரி திருவிழா தொடங்குகிறது. அடுத்து வரும் ஒன்பது நாட்களும் அம்மன் ஆலயங்களில் திருவிழா தான். சிவராத்திரி சிவபெருமானுக்கு உகந்த அற்புத நாள்; அதேபோல், அம்பிகைக்கு உகந்தது நவராத்திரிப் பெருநாள்.

‘நவம்’ என்ற சொல்லுக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. ‘நவ நவமாய் பெருகும்’ என்பார்கள். நவக்கிரகங்கள், நவரத்தினங்கள், நவதானியங்கள், நவயோகங்கள், நவரசங்கள், நவபாஷாணங்கள், நவகற்பங்கள், நவமேகங்கள், நவநிதியங்கள் என ஒன்பது குறித்து விசேஷமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அந்த வகையில், ஒன்பது நாட்களுக்கு விமரிசையாக கொண்டாடப்படுகிறது நவராத்திரிப் பெருவிழா.

திருநெல்வேலி அருள்மிகு காந்திமதி அம்மன்
திருநெல்வேலி அருள்மிகு காந்திமதி அம்மன்

புரட்டாசி மாதம் அமாவாசைக்கு பிறகு பூர்வ பட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி திதியில் முடியும் ஒன்பது இரவுகளே நவராத்திரி திருவிழா. நவராத்திரி பண்டிகை முடிந்து வரும் தசமி திதியை ‘விஜயதசமி’ என்று கொண்டாடி பூஜையை நிறைவு செய்கிறோம். பொதுவாகவே, பிரதமை, அஷ்டமி, நவமி ஆகிய திதிகளை சுபகாரியங்கள் செய்ய விலக்கி வைப்பது வழக்கம். அந்த திதிகளைச் சிறப்பிப்பதற்காகவும், எல்லா திதிகளிலும் இறையம்சம் நிறைந்திருக்கிறது என்பது நமக்கு உணர்த்துவதற்காகவும் நவராத்திரியில் இந்த திதிகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

நவராத்திரியில் வரும் நவமி நாள் ஆயுத பூஜை என்றும் சரஸ்வதி பூஜை என்றும் கொண்டாடப்படுகிறது. மாணவர்கள் புத்தகங்கள், நோட்டுகள், பேனா, பென்சில் போன்றவற்றை வைத்து வணங்குவார்கள். கடைகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள் என்று அனைத்துத் தளத்திலும் தொழில் செய்பவர்கள் ஆயுத பூஜையை விமரிசையாகக் கொண்டாடுவார்கள்.

மதுரை மீனாட்சி அம்மன்
மதுரை மீனாட்சி அம்மன்

நவராத்திரியில் வரும் தசமி நாள் விஜயதசமி! இந்த நாளில் தொடங்கப்படுகிற எந்தச் செயலும் வெற்றிகரமாக முடியும் என்பது ஐதீகம். இந்த நாளில் ஞானம், வித்தை, கல்வி மற்றும் யோகத்துக்கு அதிபதியான சரஸ்வதி தேவியை வணங்குவதால் எல்லா வளமும், நலமும் கிடைத்து சகல கலைகளிலும் சிறந்து விளங்கலாம். சிறக்க வாழலாம். மேலும், இந்த நாளில் கல்வி கற்கவும், புதுக் கணக்கு ஆரம்பிக்கவும், முக்கிய பேச்சுவார்த்தைகள், ஒப்பந்தங்கள் போடுவதற்கும் இயல், இசை, நாடகம், நாட்டியம் போன்ற கலைகள் விருத்தியடையவும் வழிபடுவது மிகவும் சிறந்தது.

நவராத்திரி செப்டம்பர் 26ம் தேதியில் இருந்து தொடங்குகிறது. நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் அம்பிகையை வழிபடுவதும் ஆராதிப்பதும் அம்பிகைக்கு உரிய ஸ்லோகங்களைச் சொல்லி, சுமங்கலிகளையும், கன்யா பெண்களையும் வரவேற்று, மங்கலப் பொருட்கள் வழங்குவதும் இல்லத்தில் ஐஸ்வர்யம் பொங்கச் செய்யும். தீர்க்கசுமங்கலியாக வாழச் செய்யும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in