பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்… மத்திய அரசின் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்!

பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்… மத்திய அரசின் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்!

9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் ஆகிய பிரிவுகளை சேர்ந்த 9-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு படித்து வரும் 30 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை (YASASVI) வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது.

இதற்காக தேசிய தேர்வு முகமையால் கடந்த செப்டம்பர் மாதம் 29-ம் தேதி தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த தேர்வு தள்ளிவைக்கப்பட்டது. தற்போது மேற்கண்ட தேர்வு ரத்து செய்யப்பட்டு உள்ளது என்று மத்திய அரசு பொது அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதில், 9 மற்றும் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் அவர்கள் 8 மற்றும் 10-ம் வகுப்புகளில் 60 சதவீதத்துக்கு அதிகமாக மதிப்பெண்கள் பெற்று இருந்தால் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று கூறப்பட்டு உள்ளது.

எனவே தகுதியான மாணவ, மாணவிகள் அனைவரும் ஆன்லைன் மூலம் தேசிய கல்வி உதவித்தொகை தளத்தில் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு https://scholarships.gov.in மற்றும் http://socialjustice.gov ஆகிய இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in