மும்பை காவல் துறைக்கு திடீர் மிரட்டல்: இந்தியா - நியூசிலாந்து போட்டிக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!

பாதுகாப்பு பணியில் போலீஸார்
பாதுகாப்பு பணியில் போலீஸார்
Updated on
2 min read

இந்தியா - நியூசிலாந்து உலகக் கோப்பை போட்டியின் போது மும்பை போலீஸாரை குறித்து தாக்குதல் நடத்தப்பட உள்ளதாக வெளியான சமூக வலைதள தகவலால் போலீஸார் உஷார் நிலையில் உள்ளனர்.

மைதானத்திற்கு வருகை தந்த இந்திய வீரர்கள்
மைதானத்திற்கு வருகை தந்த இந்திய வீரர்கள்

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப்போட்டி மும்பையில் இன்று நடைபெற உள்ளது. இதில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

பிற்பகல் 2 மணிக்கு போட்டி தொடங்க உள்ளதால், மைதானத்தை நோக்கி ரசிகர்கள் படையெடுத்து வருகின்றனர். அதேநேரம் பாதுகாப்பு பணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸார் மைதானத்தை சுற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மும்பை காவல்நிலையத்திற்கு சமூக வலைதளம் வாயிலாக மிரட்டல் செய்தி வந்துள்ளது. இது குறித்து மும்பை போலீஸ் வட்டாரத்தின் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலில், இன்று வான்கடே மைதானத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது ஒரு மோசமான சம்பவம் நிறைவேற்றப்படும் என்று அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மும்பை காவல்துறைக்கு எக்ஸ் வலைதளம் மூலம் மிரட்டல் செய்தியை வெளியிட்டுள்ளார்.

பாதுகாப்பு பணியில் போலீஸார்
பாதுகாப்பு பணியில் போலீஸார்

இதனையடுத்து, மைதானத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் அருகில் உள்ள பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த நபர் தனது பதிவில் மும்பை காவல்துறையைக் குறி வைத்து துப்பாக்கி, கையெறி குண்டுகள் மற்றும் தோட்டாக்களை புகைப்படத்தில் காட்டியுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.

இதனால், மைதானத்தை சுற்றிலும் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

உஷார்; 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

மீண்டும் விலை உயரும் அபாயம்: தொடர்மழையால் செடியிலேயே அழுகும் தக்காளி!

மீண்டும் மீண்டுமா... அடுத்த சிக்கலில் மாட்டித் தவிக்கும் சிவகார்த்திகேயன்!

பிரதமர் மோடி குறித்து அவதூறு: ஆம் ஆத்மிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

கிராமத்தில் 20 முறைக்கும் மேல் மின்தடை: அதிகாரிகளைப் பழிவாங்க கவுன்சிலர் செய்த அதிர்ச்சி காரியம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in