இந்திய பேட்ஸ்மேன்களைத் தெறிக்கவிடுவேன்... ஷாகீன் அப்ரிடி சவால்!

ஷாகீன் அப்ரிடி
ஷாகீன் அப்ரிடி

இந்தியா - பாகிஸ்தான் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று அகமதாபாத்தில் நடக்கிறது. வேகப்பந்து வீச்சில் எப்போதும் எதிரணி வீரர்களை திணறிடிக்கும் பாகிஸ்தான். இம்முறையும் தனது வேகப்பந்து வீச்சாளர்களை நம்பியே களமிறங்குகிறது.

இந்நிலையில், அந்த அணியின் ஷாகீன் அப்ரிடி சமீபத்தில் இந்திய அணிக்கு புதிய சவால்விட்டுள்ளார். அதில், இன்றைய போட்டியில் 5 விக்கெட் எடுத்து அதன் பிறகு செல்ஃபி எடுத்து தனது சோஷியல் மீடியாவில் பதிவிடுவேன் என கூறியுள்ளார்.

ஷாகீன் அப்ரிடி சமீப காலமாக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஆசியக் கோப்பை தொடரின் போது நல்ல பார்மில் இருந்த அவர், உலகக் கோப்பை தொடரில் பெரிதாக சோபிக்க முடியவில்லை. உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்திலேயே அவரால் ஒரு விக்கெட்டுகள் கூட வீழ்த்த முடியவில்லை.

ஷாகீன் அப்ரிடி
ஷாகீன் அப்ரிடி

நன்றாக பந்துவீசுவார் என பாகிஸ்தான் அணி நிர்வாகம் அவர் மீது பெரும் நம்பிக்கை வைத்திருந்தது. ஆனால், அந்த நம்பிக்கைக்கு ஏற்ப முதல் இரண்டு போட்டிகளிலும் ஷாகீன் அப்ரிடி பந்துவீசவில்லை. விக்கெட் எடுக்க தடுமாறியதுடன், நிறைய ரன்களை விட்டுக் கொடுத்தார். சரியான லைன் அன்ட் லென்தில் பந்துவீச முடியமல் திணறியதோடு, அவரது பலமான ஸ்விங்கும் கைக்கொடுக்கவில்லை. ரைட் ஆர்ம் அல்லது ஓவர் ஸ்விங் என எந்த சைடில் போட்டாலும் பந்து எதிர்பார்த்தளவுக்கு ஷாகீன் அப்ரிடியின் பந்துவீச்சில் திரும்பவில்லை.

கடைசி 5 ஒருநாள் போட்டிகளில் மட்டும் சராசரியாக ஒரு போட்டிக்கு 69 ரன்கள் விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்திருக்கிறார். இந்நிலையில்தான், அவர் இந்தியாவுடனான போட்டியில் நிச்சயம் சிறப்பாக பந்துவீசுவேன் என தெரிவித்திருக்கிறார்.

ஷாகீன் அப்ரிடி எப்போதும் இந்திய அணிக்கு எதிராக சிறப்பாக பந்துவீசக்கூடியவர். 20 ஓவர் உலகக் கோப்பை மற்றும் ஆசிய கோப்பை என அனைத்து தொடர்களிலும் இந்திய அணியை திணறடித்திருக்கிறார். அண்மையில் நிறைவடைந்த ஆசியக் கோப்பை போட்டியில் கூட இந்திய அணிக்கு எதிராக 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். அதில் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோரின் விக்கெட்டும் அடங்கும்.

இதையும் வாசிக்கலாமே...

இன்று மகாளய அமாவாசை... இதைச் செய்தால் கடன் தொல்லைத் தீரும்!

இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000... திட்டத்தை உடனே நிறுத்தச் சொல்லி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

பேச மறுத்த காதலி... வெறித்தனமாய் 13 முறை கத்தியால் குத்திய காதலன்!

தங்கம் விலை அதிரடியாக உயர்வு... சவரனுக்கு ரூ.360 உயர்ந்தது!

இன்று வானில் வர்ணஜாலம்... நெருப்பு வளையத்திற்குள் நிகழப்போகும் அற்புதம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in