இனி உங்களை விட்டு போகமாட்டேன்... பிரதமருக்கு உறுதியளித்த நிதிஷ்குமார்!

பிரதமர் நரேந்திர மோடியுடன், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார்
பிரதமர் நரேந்திர மோடியுடன், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார்

இனிமேல் தேசிய ஜனநாயக கூட்டணியை விட்டு போக மாட்டேன் என பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் உறுதியாக தெரிவித்துள்ளார்.

பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் சார்பில் முதலமைச்சராக நிதிஷ்குமார் பதவி வகித்து வருகிறார். கடந்த 2022ம் ஆண்டு வரை பாஜக கூட்டணியில் இருந்து வந்த நிதிஷ்குமார், அந்த கூட்டணியில் இருந்து விலகி ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் அடங்கிய மகாபந்தன் கூட்டணியில் இணைந்து 8வது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்றார்.

இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் பாஜகவிற்கு எதிராக காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியை உருவாக்க அவர் முக்கிய பங்கு வகித்தார். இதையடுத்து இந்தியா கூட்டணியின் தேசிய ஒருங்கிணைப்பாளராகவும் அவர் அறிவிக்கப்பட்டிருந்தார்.

இதனிடையே கடந்த ஜனவரி மாதம் 28ம் தேதி மகாபந்தன் கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்த நிதிஷ்குமார், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து நாடு முழுவதும் உள்ள இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.

இதைத் தொடர்ந்து மீண்டும் அவர் பீகார் மாநிலத்தின் முதலமைச்சராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார். இதையடுத்து நாடு முழுவதும் உள்ள இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள அரசியல் கட்சியினர் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து தேர்தலை எதிர்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார்
பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார்

இதனிடையே பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நலத்திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டும் விழாவில் பங்கேற்க பீகார் மாநிலம் அவுரங்காபாத்திற்கு வருகை தந்துள்ளார். கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு அவர் முதல்முறையாக பீகார் வருகை தந்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் பங்கேற்றார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு, மாலை அணிவிக்கப்பட்டபோது நிதிஷ்குமாரையும் உடன் அழைத்து மாலையை பெற்றுக் கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டார்.

பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார்
பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார்

இந்த நிலையில் மேடையில் பேசிய நிதிஷ்குமார், ”நான் உறுதியாக சொல்கிறேன். நாங்கள் இனி எங்கும் செல்லப் போவதில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியை விட்டு போக மாட்டேன். பிரதமர் மோடி தலைமையிலான தே.ஜ.கூட்டணி, அனைத்து மாநில வளர்ச்சியிலும் புதிய உயரங்களை தொடும். பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணைந்து புதிய ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தான் எங்களுக்கு எஜமானர்கள். அவர்களுக்கு சேவை செய்வதே எங்களது அடிப்படை நோக்கம். மத்தியிலும், மாநிலத்திலும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தால், வளர்ச்சிப் பணிகள் வேகம் அடையும். மாநில மக்கள் மேம்படுவர்” என்று தெரிவித்தார்.

இதையும் வாசிக்கலாமே...

2 தொகுதிகள் தான்... திமுக கறார்: பேச்சுவார்த்தைக்குச் செல்லாமல் விசிக நிர்வாகிகளுடன் திருமா ஆலோசனை!

வெளிநாட்டு சுற்றுலா பயணி கூட்டு பாலியல் பலாத்காரம்: 7 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்!

பேருந்தில் நடந்த பயங்கர சம்பவம்.. நடிகை ஆண்ட்ரியா அதிர்ச்சி பேட்டி!

தபால் ஓட்டு... சீனியர் சிட்டிசன்களுக்கு முக்கிய அறிவிப்பு!

போதையில் தள்ளாடும் தமிழகம்... அரசின் மெத்தனப்போக்கு காரணமா? ஒன்று சேரும் எதிர்கட்சிகள்!?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in