கத்தார் மரணதண்டனையில் இருந்து 8 இந்திய முன்னாள் வீரர்களை மீட்போம்... உறுதி தெரிவிக்கும் பாஜக!

கடற்படை வீரர்கள்
கடற்படை வீரர்கள்

இந்திய கடற்படை முன்னாள் வீரர்களை சட்டரீதியாக மீட்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என பாஜக செய்தி தொடர்பாளர் அஜய் அலோக் தெரிவித்துள்ளார்.

கத்தார் நாட்டில், அல் தஹ்ரா என்ற நிறுவனத்தில் பணியாற்றி வந்த இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் 8 பேரை, அந்நாட்டு நீதிமன்றம் கடந்த 2022-ம் ஆண்டு கைது செய்தது. இஸ்ரேல் நாட்டிற்காக கத்தார் நாட்டின் ராணுவ ரகசியங்களை உளவு பார்த்ததாக 8 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 8 பேருக்கும் நேற்று முன்தினம் மரணதண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இது இந்தியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக செய்தி தொடர்பாளர் அஜய் அலோக்
பாஜக செய்தி தொடர்பாளர் அஜய் அலோக்

சிறையில் உள்ள 8 பேரின் குடும்பத்தினருடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், 8 பேரை மீட்பதற்கான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மேற்கொள்ளும் எனவும் கத்தாருக்கான இந்திய தூதர் அறிவித்திருந்தார்.

இதனிடையே, இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜகவின் செய்தி தொடர்பாளர் அஜய் அலோக், முன்னாள் வீரர்கள் 8 பேரையும் சட்டரீதியில் மீட்போம் என தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கையில் மத்திய அரசு வெல்லும் என நம்பிக்கை தெரிவித்த அவர், அதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in