பிக் பாஸ் வீட்ல இந்த கூத்தெல்லாம் நடக்குது... உண்மையை உடைத்த முன்னாள் போட்டியாளர்!

பிக் பாஸ்7
பிக் பாஸ்7

பிக் பாஸ் தமிழ் இல்லத்திற்குள் நடப்பது வேறு... வெளியில் இருந்து நீங்கள் பார்ப்பது வேறு என கடந்த வாரம் வெளியேறிய விஜய் வர்மா கூறியுள்ளார்.

பிக் பாஸ் தமிழின் ஏழாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் நாளில் இருந்தே பரபரப்புகளுக்கு பஞ்சம் இல்லாமல் இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில், இந்த வாரம் ஐந்து போட்டியாளர்கள் வைல்ட் கார்டில் நுழைய இருக்கிறார்கள். மேலும், கடந்த வாரத்தில் விஜய் வர்மா வெளியேற்றப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது எனப் பலரும் சமூக வலைதளத்தில் தெரிவித்து வந்தனர்.

பிக் பாஸ் இல்லத்தில் முதல் கேப்டனாகத் தேர்வான விஜய் வர்மா தலைவராக சிறப்பாகவே செயல்பட்டார். மேலும், பிக் பாஸ் இல்லத்தில் கண்டெண்ட் கொடுப்பது, சண்டை போடுவது, டாஸ்க் பரபரப்பாக செய்வது என சிறப்பாகவே செயல்பட்டார். இறுதி வரை செல்வார் எனப் பலரும் கணித்த நிலையில், அவர் வெளியேறி இருப்பது அதிர்ச்சியளிப்பதாகப் பலரும் தெரிவித்தனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் வர்மா
பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் வர்மா

விஜய் வர்மாவும் வெளியில் வந்தவுடன் இன்னொரு வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் பிக் பாஸ் இல்லத்திற்குள் செல்வேன் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் அளித்துள்ள சமீபத்திய பேட்டியில், “பிக் பாஸ் வீட்டிற்குள் நிறைய விஷயங்கள் நடந்து கொண்டு இருக்கிறது. ஆனால், வெளியே வந்து பார்த்தால் அது வேறு மாதிரி காட்டப்பட்டுள்ளது. நிறைய காட்சிகள் கட் செய்யப்பட்டு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக தான் அங்கு என்ன நடக்கிறது என்று ரசிகர்களுக்கு முழுவதுமாக தெரியவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியில் எனக்கு வைல்ட் கார்ட் மூலம் மீண்டும் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தால் நான் வேறு மாதிரி விளையாடுவேன்” எனவும் விஜய் வர்மா தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in