அதிர்ச்சி… கபடி வீராங்கனை தூக்கிட்டு தற்கொலை!

அதிர்ச்சி… கபடி வீராங்கனை தூக்கிட்டு தற்கொலை!

கர்நாடகாவில் கபடி வீராங்கனை ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹாசன் அருகே சென்னராயப்பட்டணா கே.திம்மலாபூர் கிராமத்தை சேர்ந்த கபடி வீராங்கனை தனலட்சுமி (26) பெங்களூரு ரூரல் நெலமங்களா அரிசினகுண்டே ஆதர்ஷ் நகரில் பெற்றோருடன் வசித்து வந்தார்.

இவர் சர்வதேச கபடி போட்டிகளில் கலந்து கொண்டு நாட்டுக்காக பல்வேறு பதக்கங்கள் வாங்கி உள்ளார். பெங்களூரு காடுகோடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நெலமங்களா டவுன் பகுதியில் இருந்து தினமும் வேலைக்கு சென்று வந்தார்.

இந்நிலையில் தனலட்சுமி தனது தோழிகளுடன் மைசூரு தசரா விழாவுக்கு சென்றிருந்தார். ஜம்பு சவாரி ஊர்வலத்தை கண்டுகளித்துவிட்டு தனலட்சுமி பெங்களூரு திரும்பினார். இரவு அவர் வீடு திரும்பிய நிலையில், காலை வெகுநேரமாக அவரது அறை கதவு திறக்கப்படவில்லை.

அவரது தந்தை கதவை தட்டியும் திறக்காததால், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது தனலட்சுமி தனது அறையில் தூக்கில் தொங்கிக் கொண்டு இருந்ததை பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் தனலட்சுமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கபடி வீராங்கனை தனலட்சுமியின் இறப்பு குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in