ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்த தங்கத்தின் விலை... நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

தங்கம்
தங்கம்

கடந்த சில தினங்களாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை இன்று ஒரேயடியாக சவரனுக்கு ரூ.520 உயர்ந்துள்ளது நகைப்பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம்
தங்கம்

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது.

அதன்படி,தங்கம் நேற்று ஒரு கிராம் 5,705 ரூபாய்க்கும், ஒரு சவரன் 45,640 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை மேலும் உயர்ந்துள்ளது.

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 65 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 5,770 ரூபாயாகவும், சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 46,160 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதே சமயம் 24 கேரட் சுத்த தங்கம், கிராமுக்கு 65 ரூபாய் உயர்ந்து, 6,240 ரூபாய்க்கும், சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்து, 49,920 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

வெள்ளி
வெள்ளி

வெள்ளியின் விலையில் இன்று எந்தவிதமான மாற்றமுமின்றி ரூ.77.50 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி 77,500 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் நகை வாங்குவோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். அவர்களுக்கு மேலும் கவலை தரும் வகையில் தங்கம் விலை இன்று மேலும் உயர்ந்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in