ஆளுநருக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை... பாஜக துணைத்தலைவர் அதிரடி!

பாஜக துணைத்தலைவர் கரு.நாகராஜன் செய்தியாளர் சந்திப்பு
பாஜக துணைத்தலைவர் கரு.நாகராஜன் செய்தியாளர் சந்திப்பு

தமிழக ஆளுநருக்கு தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என பாஜக மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் பொங்கல் தொகுப்புடன் வழங்கப்பட்ட வேட்டி, சேலையில் ஊழல் நடைபெற்றுள்ளதாக பாஜகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் இன்று பாஜக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது. தமிழக பாஜக சார்பில் துணைத் தலைவர்கள் கரு.நாகராஜன், பால் கனகராஜ், மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட புகார் மனு அளித்தனர்.

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்கக அலுவலகம்
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்கக அலுவலகம்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கரு.நாகராஜன், “ திமுக அரசு தமிழக மக்களை வஞ்சிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. தொடர்ச்சியாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் திமுக ஃபைல்ஸ் 1,2,3, ஆ.ராசா, கனிமொழி, சபரீசன் ஆடியோ விகாரம் என அனைத்தையும் குறிப்பிட்டு வருகிறார். அமைச்சர் காந்தி ஊழலை குறிப்பிட்டு லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் புகார் கொடுத்து உள்ளோம். ரூ.67 கோடி அளவிற்கு ஊழல் நடந்திருக்கிறது. அரசாங்க விலையில் இருந்து ரூ.160 வித்தியாசம் வருகிறது.” என்றார்.

பாஜக துணைத்தலைவர் கரு.நாகராஜன் செய்தியாளர் சந்திப்பு
பாஜக துணைத்தலைவர் கரு.நாகராஜன் செய்தியாளர் சந்திப்பு

மேலும், “காட்டன் பயன்படுத்துவதற்கு பதில் 78% பாலியஸ்டர் பயன்படுத்தப்பட்டு உள்ளது. ரூ.320 மதிப்பிலான காட்டன் நூலுக்கு பதிலாக, வெறும் ரூ.160 மதிப்பிலான பாலியஸ்டர் நூலை பயன்படுத்தி ஊழல் நடைபெற்றுள்ளது.” என்றார்.

சட்டமன்றத்தில் ஆளுநர் 4 நிமிடத்தில் உரையை முடித்துக் கொண்டதற்கு பல்வேறு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறித்த கேள்விக்கு, “ஆளுநருக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சட்டமன்றத்தில் ஆளுநருக்கும் தமிழக அரசிற்கும் இடையில் நடக்கும் பிரச்சனைக்கு, பாஜக பதில் தர வேண்டிய அவசியம் இல்லை” என தெரிவித்தார்.

இதையும் வாசிக்கலாமே...

ஆளுநருக்கு அப்பாவு கொடுத்த பதிலடி... தமிழக சட்டமன்றத்தில் பரபரப்பு!

'வேலை கிடைக்கவில்லை; ஆனாலும் மக்களின் பாக்கெட்டுகள் கொள்ளையடிக்கப்படுகிறது' - மத்திய அரசு மீது ராகுல் தாக்கு

தமிழக அரசின் ஆளுநர் உரை... ஊசிப்போன பண்டம்... எடப்பாடி பழனிசாமி பேட்டி!

குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்தால் ஆண்மை நீக்கம்... மீண்டும் விவாதத்துக்கு வந்த ‘விதை நீக்கம்’ தண்டனை

“வந்துட்டேன்னு சொல்லு...” சமந்தா சொன்ன சூப்பர் அப்டேட்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in