“வந்துட்டேன்னு சொல்லு...” சமந்தா சொன்ன சூப்பர் அப்டேட்!

நடிகை சமந்தா
நடிகை சமந்தா

ஏழு மாத இடைவெளிக்கு பிறகு, ‘மீண்டும் நடிக்க வருகிறேன்’ என நல்ல செய்தி சொல்லியிருக்கிறார் நடிகை சமந்தா.

நடிகை சமந்தா
நடிகை சமந்தா

நாகசைத்தன்யாவுடனான தன்னுடைய திருமணபந்தம் முறிவுக்குப் பின், க்ளாமரிலும் கலக்க துவங்கிய சமந்தா சினிமாவில் அடுத்தடுத்து உச்சத்திற்கு வந்தார். ரசிகர்கள் மத்தியிலும் நடிகை சமந்தாவுக்கு கிரேஸ் அதிகமானது. இந்நிலையில், திடீரென மீண்டும் சமந்தாவை மையோசிடிஸ் நோய் தாக்கியதில், உடலளவில் பலவீனமாக உணர்வதாகச் சொன்ன சமந்தா, சிகிச்சைக்காக சினிமாவில் இருந்து ஆறுமாத காலங்கள் பிரேக் எடுக்கப் போவதாக அறிவித்திருந்தார்.

இந்த ஆறுமாத காலங்கள் ஆன்மிகப் பயணம், தோழிகளுடன் ரிலாக்ஸ் டிரிப், சோஷியல் மீடியாவில் விளம்பரம், இதற்கிடையில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கியது என அடுத்தடுத்து சிகிச்சையுடன் கூடவே தன்னை பிஸியாக்கி கொண்ட சமந்தா, இந்த இடைவெளி தனக்கு தனிப்பட்ட முறையில் புத்துணர்ச்சியாக இருந்ததாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்த ஏழு மாத இடைவேளைக்குப் பிறகு, மீண்டும் தான் நடிக்க வர இருப்பதாகக் கூறியுள்ளார். இதுகுறித்து தனது சமூகவலைதளப் பக்கத்தில், “மீண்டும் நடிப்புத் துறைக்கு திரும்பிவிட்டேன். நிறைய பேர் எப்போ படத்தில் நடிக்க போகிறீர்கள் என்று கேட்டீர்கள். இறுதியாக அதற்கு விடை கிடைத்து விட்டது. இவ்வளவு நாட்கள் நான் வேலையில்லாமல் இருந்தேன். ஆனால் அதேநேரத்தில் நான் என் தோழியுடன் சேர்ந்து பாட்காஸ்ட் ஒன்றையும் செய்திருக்கிறேன். இதை நான் செய்வேன் என்று எதிர்பார்க்கவில்லை.

ஆனால், இது எனக்குப் பிடித்திருக்கிறது. இந்த பாட்காஸ் உடல்நலம் சம்பந்தப்பட்டது. அடுத்த வாரம் அதை வெளியிட உள்ளேன். அது உங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்” எனக் கூறியுள்ளார்.

சமந்தாவுக்கு இரண்டாவது திருமணம் என்ற செய்தி பரவி வரும் நிலையில், அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தனது நடிப்புப் பயணத்தை மீண்டும் தொடங்கியுள்ளார் சமந்தா.

இதையும் வாசிக்கலாமே...

இன்று முடிவாகிறது தொகுதிகளின் எண்ணிக்கை... மூன்று கட்சிகளுடன் திமுக பேச்சு!

தமிழகத்தில் எமர்ஜென்சியா...? பகீர் கிளப்பிய பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா!

வெளியானது வேட்பாளர் பட்டியல்... பாஜக மூத்த தலைவர்கள் அதிர்ச்சி!

அயோத்தி செல்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்... பஞ்சாப் முதல்வருடன் ராமர் கோயிலில் வழிபாடு!

தமிழகமே அதிர்ச்சி... ரயில் முன் பாய்ந்து 5 பேர் தற்கொலை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in