ஆளுநருக்கு அப்பாவு கொடுத்த பதிலடி... தமிழக சட்டமன்றத்தில் பரபரப்பு!

சட்டமன்றத்தில் ஆளுநர்
சட்டமன்றத்தில் ஆளுநர்

தமிழ்நாடு அரசின் உரையை வாசிக்க மறுத்து அமர்ந்திருந்த ஆளுநருக்கு சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு அளித்துள்ள பதிலடியால்  அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆளுநர் உரையுடன் தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று கூடியது. சட்டப்பேரவைக்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, அனைவருக்கும் வணக்கம் என தமிழில் பேசி தனது உரையைத் தொடங்கினார். “பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிவ்வைந்து" என்ற திருக்குறளை வாசித்தார். “வாழ்க தமிழ்நாடு, வாழ்க பாரதம்” என்று மட்டும் கூறி உரையை முற்றிலும் வாசிக்காமல் புறக்கணித்து அமர்ந்தார். அதற்கான காரணமாக சட்டசபையில் தேசிய கீதம் புறக்கணிக்கப்பட்டதாக சட்டசபையில் ஆளுநர் கூறினார். 

அதன் பின்னர் ஆளுநர் உரையின் தமிழாக்கம் முழுவதையும் சபாநாயகர் அப்பாவு படித்து முடித்தார். அத்துடன் ஆளுநரை பார்த்து அவர், நாட்டுப்பண் இசைத்தல் குறித்து ஆளுநர் எழுதிய கடிதம் கடந்த ஆண்டே தீர்க்கப்பட்டுவிட்டது. இந்த பேரவை எப்போதும் மரபுகளை பின்பற்றி வருகிறது. மாண்புமிகு ஆளுநர் உரை தொடக்கத்திற்கு முன் தமிழ்த்தாய் வாழ்த்தும், பின்னர் நாட்டுப்பண்ணும் இசைக்கப்பட்டு வருகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறினார்.

அத்துடன் நிறுத்திக் கொள்ளாத சபாநாயகர் அப்பாவு,  “தமிழ்நாடு புயல் வெள்ளத்திற்கு மத்திய அரசு ஒரு பைசா கூட தரவில்லை. பி.எம்., கேர் நிதியிலிருந்து ரூ.50,000 கோடியை வாங்கித் தரலாமே... கணக்கு கேட்க முடியாத பல கோடி ரூபாய் பணம் பி.எம்., கேர் நிதியில் உள்ளது. அதிலிருந்து  ரூ.50,000 கோடியை ஆளுநர் வாங்கித் தந்தால் நன்றாக இருக்கும்" என்று கேட்டுக்கொண்டார்.

"சாவர்க்கர் வழியில், கோட்சே வழியில் வந்தவர்களுக்கு தமிழகமும், தமிழக மக்களும், சட்டமன்றமும் சளைத்ததில்லை. ஆளுநர் உரை என்பது அரசியல் அமைப்பு சட்டப்படி அவரது கடமை. அந்த மரபுகளை மீறி ஆளுநர் உரை அமைந்துள்ளது" என்று பேசினார். 

அதைத் தொடர்ந்து “2024 ம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடரில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆளுநர் உரை இந்த மன்றத்திற்கு வழங்கப்பட்டபடியே பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிகிறேன்” என அவை முன்னவர் துரைமுருகன் கொண்டு வந்த தீர்மானம் பேரவையில் ஒருமனதாக நிறைவேறியது.

கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் தேசிய கீதம் இசைக்கும் முன்னரே சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தார் ஆளுநர் ரவி. சட்டசபையில் முதலில் தேசிய கீதம் இசைக்க வேண்டும் என்ற ஆளுநர் கருத்து சபைக்குறிப்பில் இடம் பெறாது எனவும் சட்டசபை சபாநாயகர் அப்பாவு அதிரடியாக அறிவித்தார்.

இதையும் வாசிக்கலாமே...

இன்று முடிவாகிறது தொகுதிகளின் எண்ணிக்கை... மூன்று கட்சிகளுடன் திமுக பேச்சு!

தமிழகத்தில் எமர்ஜென்சியா...? பகீர் கிளப்பிய பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா!

வெளியானது வேட்பாளர் பட்டியல்... பாஜக மூத்த தலைவர்கள் அதிர்ச்சி!

அயோத்தி செல்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்... பஞ்சாப் முதல்வருடன் ராமர் கோயிலில் வழிபாடு!

தமிழகமே அதிர்ச்சி... ரயில் முன் பாய்ந்து 5 பேர் தற்கொலை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in