பாஜக தலைமைக்கு ஷாக் கொடுத்த விவேக் வெங்கட்சாமி...தெலங்கானா அரசியலில் பெரும் பரபரப்பு!

விவேக் வெங்கட்சாமி
விவேக் வெங்கட்சாமி

தெலங்கானா பாஜகவில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் மூத்த தலைவரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான டாக்டர் ஜி. விவேக் வெங்கட்சாமி தலைமைக்கு ராஜினாமா கடிதம் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜினாமா கடிதம்
ராஜினாமா கடிதம்

தெலங்கானாவில் வரும் 30-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அங்கு ஆளும் கட்சியாக உள்ள பாரத் ராஷ்டிரிய சமிதி, பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் முன்னாள் எம்.பியும், பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினருமான டாக்டர் ஜி. விவேக் வெங்கட்சாமி தனது மகனுக்கு சீட் கேட்டதாகவும் அதற்கு பாஜக தலைமை மறுத்தாகக் கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியில் இருந்த விவேக், தாய் கட்சியான காங்கிரஸில் மீண்டும் இணையப் போவதாக தகவல் வெளியானது.

ஆனால் அதனை கடந்த செவ்வாய் அன்று விவேக் மறுத்து அறிக்கை வெளியிட்டார். அதில் தான் காங்கிரஸ் தலைவர்களுடன் எந்தவிதமான தொடர்பிலும் இல்லை என்றும், தற்போது அமெரிக்காவில் உள்ளதாக கூறியிருந்தார். இந்த நிலையில், பாஜகவில் இருந்து தான் விலகுவதாக தேசிய தலைமைக்கு அவர் கடிதம் எழுதியுள்ளது தெலங்கானா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜினாமா செய்துள்ள விவேக், காங்கிரஸில் மீண்டும் இணைந்து சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

இன்று கர்வா சௌத்: நிலவை ஏன் பெண்கள் சல்லடை வழியே பார்க்கிறார்கள்?! விரத பலன்களைத் தெரிஞ்சுக்கோங்க!

அதிகாலையிலேயே அதிர்ச்சி... சிலிண்டர் விலை ரூ.101 உயர்வு! கதறும் பொதுமக்கள்!

பகீர்...நடுரோட்டில் போலீஸ்காரர் மீது கொலைவெறி தாக்குதல்.... அதிர்ச்சி வீடியோ

டிகிரி முடித்தவர்களுக்கு விமான நிலையத்தில் வேலை வாய்ப்பு... இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

குட்நியூஸ்... இன்று முதல் மின் கட்டணம் அதிரடியாக குறைப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in